ரேவதியின் திருமணம் நடக்குமா? உண்மையை கண்டுபிடித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மாயா பற்றி தெரிந்து கொண்ட கார்த்திக் ஒரு திட்டம் போட்டு, ரகசிய நம்பரில் இருந்து மாயாவுக்கு போன் போட்டு மயில்வாகனத்தை பேச சொல்கிறான். இதையடுத்து, மயில்வாகனம் மாயாவுக்கு போன் போட்டு நீ யாருனு எனக்கு நல்லா தெரியும்.. கொழுந்தன் கூட ஜாலியா இருந்து கர்ப்பம் ஆகிட்டு, இப்போ கர்ப்பத்தை கலைத்து விட்டாயா? டாக்டர் மல்லிகாவை தெரியுமா என்று கேட்க மாயா அதிர்ச்சி அடைந்து போனை கட் செய்து விடுகிறாள். மீண்டும் போன் செய்யும் மயில்வாகனம் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் இந்த விஷயத்தை யாரிடம் சொல்லாமல் இருப்பேன் என்று மிரட்ட மாயா பணம் தருவதாக சொல்லுகிறாள்.
இந்த விஷயத்தை மாயா, மகேஷிடம் சொல்ல, பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க மாயா, ரேவதியை சந்தித்து கல்யாண செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் கேட்க ரேவதி மாயாவை அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி முன்னாடி நிறுத்தி இவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுங்க என்று சொல்கிறாள். இதை, மயில்வாகனம் மற்றும் கார்த்திக் இருவரும் மறைந்து நின்று பார்க்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சந்திரகலா செய்த வேலை: கார்த்திக்கை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்று பிளான் பண்ணும், சந்திரகலா கல்யாண பத்திரிகையை எப்படியாவது மாற்றி வைத்துவிட்டால் கார்த்திக், சாமுண்டீஸ்வரியிடம் மாட்டிக்கொள்வான் என பிளான் போடுகிறாள். கார்த்திக் பத்திரிக்கை கொடுக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்காக, பின்னாடியே சென்று தெரிந்து கொண்டு. அதே இடத்தில், கிரகப்பிரவேசத்துக்கு பத்திரிகை அடிக்க வேண்டும் என பொய் சொல்லிவிட்டு, ஓனர் அசந்த நேரமாக பார்த்து, அங்கிருந்த ரேவதியின் கல்யாண பத்திரிக்கையை மாற்றி வைத்துவிடுகிறாள்.
மாயா, மகேஷ் : மறுபக்கம் கார்த்திக்கும் மயில்வாகனமும் மாயா பணத்தை வாங்குவதற்காகன செல்கின்றனர். அப்போது அந்த வரும் மகேஷ், முகத்தை மறைத்துக்கொண்டு மங்கி குல்லா அணிந்து வருகிறான்.ஆதாரத்தை கொடு என்று மகேஷ் கேட்க, மாறுவேஷத்தில் இருக்கும் மயில்வாகனம், நீ எனக்கு பணத்தை கொடுத்தால் தான் நான், ஆதாரத்தை தருவேன் என்று சொல்ல உடனே மகேஷ் பணத்தை கொடுக்கிறான். பின் ஆதாரம் எங்கே என்று கேட்க, நீ தான்டா ஆதாரம் என்று மயில்வாகனன் பாய்ந்து சென்று மகேஷின் தொப்பியை கழட்டி, கார்த்திகைக்கை அழைக்கிறான் அப்போது அங்கு வரும் கார்த்திக் மகேசை பளார் என்ற அடிக்கிறார்.
மருத்துவமனையில் மயில்வாகனம்:இது எல்லாத்தையும் மறைந்து இருந்து மாயா பார்த்து இருக்கிறாள். கார்த்திக் மகேசை அடித்து இழுத்துப்போக, ஓடி வந்த மாயா, மயில்வாகனத்தை குத்திவிடுகிறாள். இதனால மயில்வாகனம் அப்படியே சரிந்து விழ, கார்த்திக் அவரை காப்பாற்ற ஓடி வர, அந்த நேரத்தை பயன்படுத்தி மாயா, மகேஷ் இருவரும் தப்பித்து விடுகின்றனர். கார்த்திக், மயில்வாகனை ஹாஸ்பிடல் அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறகு, வீட்டில் கம்பி குத்தி காயம் ஏற்பட்டதாக சொல்லி குடும்பத்தாரை சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











