தீபாவிற்கு கார்த்திக் தரும் பிறந்த நாள் சர்ப்ரைஸ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஆசிரமத்தில் தீபா பாடுவதைப் பார்த்து தீபா தான் பல்லவி என்பதை தெரிந்து அதிர்கிறான். நாம ரசித்த குரலுக்கு சொந்தக்காரி தனது மனைவி தான் என்பதை அறிந்து சந்தோஷப்படுகிறான். இதையடுத்து, தீபா வீட்டிற்கு வந்து தர்மலிங்கத்திடம் இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என் கிட்ட இருந்து மறைச்சீங்க இது ரொம்ப பெரிய தப்பு என்று சொல்ல அவர்கள் நடந்த விஷயத்தை சொல்கிறார்கள்.

அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான். இதையடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial january 29th full episode

தீபா பிறந்த நாள் கொண்டாட்டம்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தலையில் கட்டுடன் கார்த்திக் வீட்டுக்கு வருவதை பார்த்து அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்டு பதறுகின்றனர். பிறகு கார்த்திக் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஏதோ கூறி சமாளித்து விடுகிறான். இதையடுத்து, நாளைக்கு தீபாவோட பிறந்தநாள் அதை செலப்ரேட் பண்ணனும் என்று சொல்ல நம்ம வீட்ல பெண்களோட பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம் கிடையாது என்று அபிராமி செல்கிறான். உடனே கார்த்திக், தீபாவுக்காக இதுவரைக்கும் நாம எதுவுமே செஞ்சது இல்ல அதனால இது செய்யணும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்லி அபிராமி சம்மதிக்க வைக்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 29th full episode

ஷாக்கான மீனாட்சி: அது மட்டுமல்ல நாளைக்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக பல்லவி வர போறாங்க என்று கார்த்திக் சொல்ல மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். ஐஸ்வர்யாவும் பல்லவி, தீபா தானே அப்படி இருக்கும்போது வேற யார் வர போறா என குழப்பம் அடைகிறாள். அருண் நாளைக்கு எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு, பர்த்டே பார்ட்டியில் இருக்க முடியாது என்று வாழ்த்து சொல்லி விட சொல்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 29th full episode

எனக்கு எல்லாம் தெரியும்: இப்படி ஒரு பக்கம் தீபாவின் பிறந்த நாள் ஏற்பாடு நடந்து கொண்டு இருக்க, ஐஸ்வர்யாவுக்கு சிதம்பரத்தின் மேனேஜர் ஃபோன் செய்து சிதம்பரம் மனைவி மாயா மேடம் உங்களை பார்க்க வேண்டும் என சொன்னதாக கூப்பிட ஐஸ்வர்யாவும் கிளம்பி செல்கிறாள். இங்கே மீனாட்சி, தீபாவுக்கு தகவல் சொல்ல போன் பண்ண, அங்கு வரும் கார்த்திக் என்ன தகவல் சொல்ல தயாராகிட்டீங்களா என்று ஷாக் கொடுக்கிறான். மேலும் தீபா தான் பல்லவி என்பது எனக்கு தெரிஞ்சு போச்சு இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய போகுது நாளைக்கு வரைக்கும் நீங்க அத பத்தியும் பேசாம அமைதியா இருக்கணும் என மீனாட்சியை ஆஃப் பண்ணுகிறான்.

நாளைக்கு பெரிய சர்ப்ரைஸ்: இங்கே ஹாஸ்பிடல் வந்த ஐஸ்வர்யா மாயாவை சந்திக்க மாயா அந்த கார்த்தியை பழிவாங்காம விடக்கூடாது எனக்கு உங்களுடைய உதவி தேவை என இருவரும் கைகோர்க்க ஐஸ்வர்யா கூட்டணிக்குள் ரூபஸ்ரீயையும் சேர்த்துக் கொள்கிறாள். தீபா வீட்டுக்கு வர கார்த்தி, அவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சிட்டீங்க என்று சொல்ல தீபா ஒன்றும் புரியாமல் நிற்கிறாள். உடனே கார்த்திக் நாளைக்கு உங்களோட பிறந்தநாள்னு நீங்க சொல்லாமலே தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல தீபா உங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X