சம்பவத்தை பெருசா பண்ணனுமா மிரட்டும் சிதம்பரம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், சிதம்பரம் மீண்டும் தீபாவுக்கு போன் செய்து எப்படியோ உன் மாமனாரை காப்பாத்திட்ட அடுத்து உன் குடும்பத்துக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க போறேன் என்று சொல்லி போனை வைக்கிறான்.

மறுபக்கம் அருணாச்சலம், அரவிந்த் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்க அருணையும் குளிக்க கூப்பிட அவன் எனக்கு நீச்சல் தெரியாதுன்னு என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இந்த நேரத்தில் அருணை யாரோ பிடித்து தள்ள அவன் தண்ணீருக்குள் விழுந்து தவிக்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 2nd full episode

அந்த நேரம் பதற்றத்தோடு ஓடி வரும் தீபா,ஸ்பீக்கரை ஆப் செய்து விட்டு அருணை காப்பாற்ற சொல்லி கத்த எல்லாரும் அவனை காப்பாற்றி மேலே அழைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

தீபாவை மிரட்டும் சிதம்பரம்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், மீண்டும் தீபாவுக்கு போன் பண்ணு சிதம்பரம், நீ இன்னும் முன் வடிவை சொல்ல, பண்ணது எல்லாம் பத்தாதா பெருசா ஏதாவது பண்ணனுமா என்று மிரட்டுகிறார். இதைத் தொடர்ந்து செல்பி பாட்டி அடுத்த போட்டியை அறிவிக்கிறார். அதாவது புருஷன் பொண்டாட்டி அப்படியே தங்களது கதாபாத்திரத்தை மாற்றி நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி என்று கூறுகிறார்.

zee tamil television Karthigai Deepam serial january 2nd full episode

செல்பி பாட்டி: இதனைத் தொடர்ந்து முதல் ஆளாக ஐஸ்வர்யா அருண் ஆகவும் அருண் ஐஸ்வர்யாவாகவும் மாறுகிறான். அருணாக நடிக்கும் ஐஸ்வரியா தீபாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச ஐஸ்வர்யாவாக நடிக்கும் அருண் இந்த வீட்ல எல்லா பிரச்சனையும் அவளாலதான் அதனாலதான் அவகிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன் என்று கூறுகிறான்.

அடுத்து நடக்கப்போவது என்ன: அதன் பிறகு மீனாட்சி ஆனந்தாகவும் ஆனந்த் மீனாட்சி ஆகவும் மாறி சமையல் பற்றி பேசி நடித்துக் காட்டுகின்றனர். தொடர்ச்சியாக அபிராமி அருணாச்சலமாகவும் அருணாச்சலம் அபிராமியாகவும் மாறி நடிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X