பலகோடி சொத்துக்களின் அதிபதி கார்த்தியா? தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம் சீரியல்
சென்னை: கார்த்திக்கு தாத்தா ராஜா சேதுபதியிடம் இருந்து போன் கால் வருகிறது. அதில், உடம்பு சரியில்லை என்று சொல்ல, உடனே கார்த்தி மற்றும் மயில்வாகனம் என இருவரும் கிளம்பி ராஜா சேதுபதியை சந்திக்கச் வருகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், ராஜா சேதுபதி உடல்நிலை சரியில்லாமல் இருக்க டாக்டர் அவரை பரிசோதனை செய்து பயப்படுற மாதிரி எதுவும் இல்லை.. மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியா போயிடும் என சொல்லி விட்டு செல்கிறார். அப்போது கார்த்திகை பார்த்த தாத்தா, கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். இதைப்பார்த்த கார்த்திக், தாதா,ஏன் தாத்தா கண்டதை நினைத்து வருத்தப்படுறீங்க, நான் இருக்கும் போது, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறான். அப்போது, தாத்தா, உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால், வருத்தப்பட்டேன். உன்னை பார்த்துவிட்டேன், இனிமேல் இந்த தாத்தாக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்கிறார்.

கார்த்திகை தீபம் சீரியல்: கார்த்திக் வந்திருக்கும் தகவல் தெரிந்த, விருமன் உட்பட எல்லோரும் வீட்டு முன்பு கூடி விடுகின்றனர். ராஜராஜன்னு கூட்டிட்டு வரேன் கோவில் திருவிழாவை நடத்துறேன்னு சவால் விட்டயே என்ன ஆச்சு எங்க என்று கேட்கிறான் விருமன். கார்த்திக் கண்டிப்பாக கூட்டிட்டு வரேன் அதுக்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறான். அப்போது,விருமன், உங்க தாத்தா கோயிலை திறந்ததுல இருந்தே ஊர்ல மழையே பெய்யல அதுக்கு காரணம் உங்க தாத்தா தான் அதனால சீக்கிரமா இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தால்தான் இந்த ஊருக்கு நல்லது, ஆனால், கோவில் கும்பாபிஷேம் நடக்குற மாதிரியே தெரியவில்லை என்று சொல்ல
பல சொத்துக்கு சொந்தக்காரன்: கோவப்படும் தாதா, தேவையில்லாமல் பேசக்கூடாது.என் மகன் ராஜா வந்து கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்றால், நான் உயிருடன் இருக்கவே மாட்டேன் என்று சொல்கிறார். அப்போது கோவப்படும் கார்த்திக், இதோ பாருங்க விருமன், சொன்ன தேதியில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும். அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல, ஊர்காரர்கள் கார்த்திக்கு ஆதரவாக பேசுகின்றனர். மயில்வாகனம் இதையெல்லாம் பார்த்துவிட கார்த்திக் குறித்த உண்மையை அறிகிறான். பிறகு கார்த்தியிடம் யாருடா நீ என்று கேட்க, ராஜராஜன் என்னுடைய மாமா தான் நான் ராஜா சேதுபதியோட பேரன் என்ற விஷயத்தை உடைக்கிறான். நீ அந்த வீட்டோட மருமகன் அப்படி இருக்கும் போது நீ எதுக்கு டிரைவராக நடிச்சுக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்க இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் என்ற விஷயத்தை சொல்கிறான்.
பிறகு மயில்வாகனத்திடம் என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் அந்த வீட்ல சொல்லக்கூடாது என பேசி கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான். வீட்டுக்கு சென்றதும் எங்க போயிருந்தீங்க என்ற விசாரிக்க பக்கத்தில் சென்று இருந்ததாக பொய் சொல்லி சமாளிக்கின்றனர். . இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











