கார்த்தியை பழி தீர்க்க வந்த பாப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் பிறந்த நாளை கொண்டாட வீட்டில் ஏற்பாடுகளை செய்கிறார் கார்த்திக், மேலும், தீபாவின் பிறந்த நாளுக்கு பல்லவி வருவதாக சொல்ல, தீபா தானே பல்லவி, நாளைக்கு கார்த்திக் யாரை அழைத்து வரபோகிறார் என்று மீனாட்சி குழப்பம் அடைகிறாள்.
ஐஸ்வர்யாவுக்கு சிதம்பரத்தின் மேனேஜர் ஃபோன் செய்து சிதம்பரம் மனைவி மாயா மேடம் உங்களை பார்க்க வேண்டும் என சொன்னதாக கூப்பிட ஐஸ்வர்யாவும் கிளம்பி செல்கிறாள். கார்த்தியை பழிவாங்காம விடக்கூடாது எனக்கு உங்களுடைய உதவி தேவை என இருவரும் கைகோர்க்க ஐஸ்வர்யா உங்க கூட்டணிக்குள் ரூபஸ்ரீயையும் சேர்த்துக் கொள்கிறாள்.இதையடுத்து, அடுத்து என்ன ஆகப்போகிறது என்று பார்க்கலாம்.

சவால்விடும் மனைவி: இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், தீபாவின் பர்த் டே பார்ட்டி, கார்த்தியின் வீட்டில் கோலாகலமாக நடக்கிறது. இந்த பிறந்த நாள் விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்ட நிலையில், தீபா தான் நான் அத்தனை நாளாக தேடிக்கொண்டிருந்த பல்லவி என்று உண்மையை அனைவர் முன்பும் சொல்லுகிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதையடுத்து, தீபா கார்த்திக்கிடம் இத்தனை நாள் உண்மை மறைத்ததற்கு மன்னிப்பு கேட்க அவன் உங்கள பெரிய பாடகியாக்கி காட்டுறேன் என்று சொல்கிறான்.
கார்த்திக்கை சும்மாவிடக்கூடாது: அதன் பிறகு ஐஸ்வர்யாவை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, சிதம்பரத்தின் மனைவி என அறிமுகம் செய்து கொள்கிறாள். அந்த கார்த்தியை சும்மா விட கூடாது, எனக்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்ல ஐஸ்வர்யாவும் ரூபஸ்ரீயையும் இந்த கூட்டணிக்குள் சேர்த்து கொள்கிறாள்.
சவால்விடும் மாயா: இதெல்லாம் முடிந்த பிறகு கார்த்திக் ஆபிசில் இருக்க அங்கு வரும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











