காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தீபா.. அபிராமி கேட்ட கேள்வி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஐஸ்வர்யா, மாயா, ரூபஸ்ரீ ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, தீபாவை அழிக்க திட்டம் போடுகிறார்கள். கார்த்திக் ஆபிசுக்கு வரும், மாயா, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன், அபிராமி வாயாலேயே தீபாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுவேன் என்கிறார்.
மாயா சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் உன்னால முடிந்ததை பாத்துக்கோ என பதிலுக்கு சவால் விடுகிறான். பின் மாயா ஐஸ்வர்யா மற்றும் ரூபஸ்ரீ என மூவரும் தீபாவின் வாழ்க்கையை அழிக்க சில வேலைகள் செய்யணும் என்று ஒன்றாக கை கோர்க்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், வீட்டில் தீபாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அந்த நேரம் தீபாவின் பெயரில் ஒரு கொரியர் வருகிறது. கார்த்திக் போய் வாங்கி பிரிச்சு பாருங்க என்று சொல்லி அனுப்பி வைக்க தீபாவும் அதை வாங்கி பிரிக்க உள்ளே புடவை இருக்கிறது. அதை கட்டிக்கிட்டு கேக் கட் பண்ண வாங்க என்று சொல்லும் கார்த்திக் புடவை கட்டிக் கொள்ளும்போது தீபாவிற்கும் உதவி செய்கிறான்.
உண்மையை உடைத்த கார்த்தி: அதோட தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுவதாக சொல்ல அவள் உங்களுக்கு மேக்கப் போட தெரியுமா? என்று கேட்க காஸ்மெட்டிக் கம்பெனி நடத்துறவனுக்கு மேக்கப் போடத் தெரியாதா? எங்க அம்மாவுக்கு எல்லாம் நான் தான் மேக்கப் போட்டு விட்டு இருக்கேன் என்று சொல்லி தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறான். பிறகு பர்த்டே பார்ட்டி தொடங்குகிறது. தீபா கேக்கை வெட்ட அருணாச்சலம் பல்லவி வரதா சொன்னியே எங்கே என்று கேட்க தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

பல்லவி தீபா தான்: உடனே கார்த்திக், தீபா தான் நான் இத்தனை நாளா தேடிக்கொண்டிருந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள். அப்போது குறுக்கிடும் கார்த்திக், தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு பால்ல சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான்.
மன்னிப்பு கேட்ட தீபா: அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்றும் கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வருகிறான்.உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











