திருமணத்திற்கு அவசரப்படும் ரேவதி.. ஆசிரமத்தில் இருக்கும் குழந்தை யாருடையது.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: தாத்தாவிற்கு உடல் நிலைசரியில்லை என போன் வர,மயில்வாகனன் மற்றும் கார்த்திக் இருவரும் ஊருக்கு செல்கின்றனர். கார்த்திக் வந்திருக்கும் விஷயம் தெரிந்து வந்த விருமன், கும்பாபிஷேகம் நடப்பது போல தெரியவில்லை, உங்கல் ஊரில் மழையே பெய்யவில்லை என்று சொல்ல, கோவப்படும் தாதா, தேவையில்லாமல் பேசக்கூடாது.என் மகன் ராஜா வந்து கும்பாபிஷேகத்தை நடத்துவான். அப்படி நடக்கவில்லை என்றால், நான் உயிருடன் இருக்கவே மாட்டேன் என்று சொல்கிறார்.

உடனே கார்த்திக், சொன்ன தேதியில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும். அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல, ஊர்காரர்கள் கார்த்திக்கு ஆதரவாக பேசுகின்றனர். மயில்வாகனம் இதையெல்லாம் பார்த்துவிட்டு, யாரு நீ என்று கேட்க, ராஜராஜன் என்னுடைய மாமா தான் நான் ராஜா சேதுபதியோட பேரன் என்ற விஷயத்தை உடைக்கிறான். பிறகு மயில்வாகனத்திடம் என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் அந்த வீட்ல சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு பேசி கொண்டிருக்கும் போது ஒருவன் ரேவதியின் கல்யாண பத்திரிக்கை தயாராகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்கிறான். இதை பார்த்த சந்திரகலா, இன்னைக்கு டிரைவருக்கு சரியான ஆப்பு இருக்கு என்று மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள்.அடுத்ததாக ராஜராஜன் பத்திரிகையை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்து வரலாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம் அப்படியே செய்யலாம் என்று சொல்கிறாள்.

பத்திரிக்கையில் மாறிய பெயர்: இந்த சமயத்தில் சந்திரகலா பத்திரிக்கை எப்படி வந்து இருக்குனு பிரிந்து பார்க்கட்டுமா என சாமுண்டீஸ்வரியிடம் அனுமதி கேட்கிறாள். சாமுண்டீஸ்வரி, இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேட்குற பிரித்து பாரு என்று சொல்ல சந்திரகலா பிரித்து பார்க்க மகேஷ் என்ற பெயருக்கு பதிலாக கணேஷ் என்று இருக்கிறது. உடனே என்ன அக்கா மாப்பிள்ளை மகேஷ் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் கணேஷ் என்று பெயர் இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதெல்லாம், இந்த டிரைவரோட வேலை தான், அவனிடம் தானே பத்திரிக்கை அடிக்க கொடுத்த, ரேவதி கழுத்தில் தாலி கட்ட தான் இப்படி செய்து இருக்கிறான் என்று சொல்கிறாள்.

அந்த குழந்தை யாருடையது: உடனே கார்த்திக், கணேஷ் என் பெயர் இல்லை என்று சொல்ல சந்திரகலா அப்படினா உன் பேர் என்ன? இதுவரைக்கும் நீ , உன்னோட பேரே சொன்னதே இல்லை என்று பிரச்சனை செய்ய, கார்த்திக் என்ன பெயர் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறான். சந்திரகலா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அப்போ உன் பெயர் தான் கணேஷ், நீ தான் வேண்டும் என்றே பத்ரிக்கையில் பெயரை மாற்றி இருக்க என்று சொல்லிக் கொண்டே போகிறாள். அப்போது, மயில்வாகனம், அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான் கூப்பிடுவாங்கலாம். அவன் பேர் ராஜா என்று சொல்லி சமாளிக்கிறாள்

அடுத்து, ரேவதி மதர்க்கு போன் செய்து குழந்தை தீபாவை எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்கிறாள். மதரும் குழந்தையை சீக்கிரம் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க, அவளும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாள் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X