வெளிநாட்டுக்கு கைமாறும் கலசம்.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: சந்திரகலா மற்றும் சிவனாண்டி என இருவரும் சேர்ந்து கலசத்தை திருடி விட்டு பழியை கார்த்திக் மீது போட்டு விட, ரேவதி கார்த்திக் அப்படி செய்து இருக்க மாட்டார் என்று நம்புகிறாள். இதைத்தொடர்ந்து கார்த்திக், கலசத்தை நான் கொண்டு வருகிறேன் என்று கலசத்தை தேடி செல்கிறான். அப்போது, கார்த்திக்கின் அறைக்கு வரும் மயில்வாகனன், சந்திரகலா உன்னை இந்த வீட்டில் இருந்து விரட்ட திட்டம் போடுகிறாள். அவள் சிவனான்டியின் மனைவி, அவர் கூட வாழாமல் இந்த வீட்டில் இருக்கிறாள் என்று சொல்ல கார்த்திக், இப்போது தான் எல்லா விஷயமும் புரிகிறது என்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

மயில்வாகனம், கார்த்திக்கிடம் வீட்டின் பின்புறம் நேற்று இரவு ஒரு தண்ணீர் வண்டி வந்து நின்றது என்று சொல்ல அது குறித்து கார்த்திக் விசாரிக்கிறான். தண்ணீர் கேன் போடும் கம்பெனிக்கு வந்து அந்த வண்டி பற்றி விசாரிக்க. வண்டியின் உரிமையாளர் வீட்டு முகவரியை கொடுக்கிறார். இதை தொடர்ந்து, கார்த்திக் அந்த நபரை தேடி வீட்டிற்கு செல்கிறான். முதலில் அவன், கலசம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி திமிராகபேச, பின் கார்த்திக் அவனை பிடித்து அடித்து உண்மையை வாங்குகிறான்.

zee tamil karthigai deepam

இன்றைய எபிசோட்: அப்போது அந்த நபர், கலசத்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார், நான் அதை விற்றுவிட்டேன் என்று சொல்ல, அது யார் என்று விசாரிக்கிறான் கார்த்திக். நான் உண்மையை சொன்ன எனக்கு பிரச்சனை வரும் என்று பயந்த அந்த நபர், வேறுவழியிலேயே இல்லாமல், சந்திரகலா தான் அந்த கலசத்தை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அந்த கலசத்தை நான் சேட்டுவிடம் விற்றுவிட்டதாகவும் சொல்கிறான்.

கலசம் கிடைக்குமா: மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் நாகம் ஒன்று புகுந்து அது குழந்தையை சீண்டி விட சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக் மற்றும் ரேவதி அவர்களின் வீட்டுக்கு வர, குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். உடனே சேட்டுவின் மனைவி, சேட்டுக்கு போன் போட்டு, இந்த கலசம் வீட்டுக்கு வந்த நேரமே சரியில்லை. குழந்தையை பாம்பு கடித்துவிட்டது. அது நமக்கு வேண்டாம், அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்னையும் என பேசிக்கொண்டு இருக்கிறாள்.

கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான். சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் சொல்ல அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள். ஆனால் சேட்டு ஒரு குடோனில் வெளிநாட்டு நபர்களை சந்தித்து கலசத்தை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X