போட்டியில் தனி ஆளாக அசர வைத்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், செல்பி பாட்டி புது போட்டியை அறிவிக்கிறார். அதாவது புருஷன் பொண்டாட்டி அப்படியே தங்களது கதாபாத்திரத்தை மாற்றி நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி.

ஐஸ்வர்யா அருண் ஆகவும் அருண் ஐஸ்வர்யாவாகவும் மாறுகிறார்கள். அதன் பிறகு மீனாட்சி ஆனந்தாகவும் ஆனந்த் மீனாட்சி ஆகவும் மாறி சமையல் பற்றி பேசி நடித்துக் காட்டுகின்றனர். தொடர்ச்சியாக அபிராமி அருணாச்சலமாகவும் அருணாச்சலம் அபிராமியாகவும் மாறி நடிக்கின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடிக்கிறது என்பதை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial january 3rd full episode

கணவர் மனைவிக்கு போட்டி: இதையடுத்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில், அருண் ஐஸ்வர்யா போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து மீனாட்சி ஆனந்ததாகவும் ஆனந்த் மீனாட்சியாகவும் மாறி மாறி நடிக்க தொடங்கினர். நீங்கள் இருவரும் சுமாராக செய்தீங்க என்கிறார் பாட்டி. இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து அருணாச்சலம், அபிராமி ஆகியோர் போட்டியில் பங்கேற்கின்றனர்.

தீபாவிற்கு கிடைத்த வாய்ப்பு: அபிராமி அருணாச்சலமாக மாறி அருணாச்சலம் அபிராமியாக மாறி நடிக்க தொடங்குகிறார். அருணாச்சலம் அபிராமி போல கம்பீரமாக ஷோபாவில் உட்கார்ந்திருக்க அருணாச்சலம் போல் நடந்து வரும் அபிராமி என்ன நாச்சியா என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என்று கேள்வி கேட்கிறாள். இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து கார்த்திக், தீபாவிற்கான வாய்ப்பு வருகிறது.

கடுப்பாகும் ஐஸ்வர்யா: ஆனால், கார்த்திக் நான் இதில் பங்கேற்கவில்லை, ரெண்டு கேரக்டரையும் தீபாவே பண்ணட்டும் என்று சொல்ல தீபா கார்த்திக்கை போலவும் தன்னை போலவும் மாறி மாறி பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாள். தன்னைப்போலவே தீபா பேசுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். இருவர் போலவும் மாறி மாறி நடித்த தீபா கடைசியில் இந்த போட்டியில் ஜெயித்ததாக பாட்டி அறிவிக்கிறர். இதைப்பார்த்து கடுப்பாகும் ஐஸ்வர்யா, இதிலும் இவளே ஜெயித்துவிட்டாளே என்று வயிற்றெரிச்சல் படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X