கலசம் கிடைத்ததா? பதற்றத்தில் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கலசம் காணாமல் போனதால், கலசத்தை தேடி கார்த்திக் ரேவதி இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, தண்ணி வண்டி பற்றி தகவல் தெரிந்த அவனிடம் கலசம் எங்கே என்று கேட்க, அந்த ரௌடி கலசத்தை சேட்டிடம் கொடுத்துவிட்டதாக, சொல்ல இருவரும் கலசத்தை தேடி செல்கின்றனர். சேட்டு வீட்டிற்குள் நாகம் ஒன்று புகுந்து அது குழந்தையை சீண்டி விட சேட்டின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக் மற்றும் ரேவதி உதவி செய்ய குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேட்டின் மகள் நல்லபடியாக குணம் அடைந்து விட கார்த்திக்கும் ரேவதியும் அங்கிருந்து கிளம்புகின்றனர். அந்த நேரம் பார்த்து சேட்டு மனைவி ஃபோன் செய்து, அந்த கலசத்தை தயவுசெய்து யாரிடமாவது கொடுத்து விடுங்கள். அந்த கலசம் வந்ததால் தான் நம்ம குழந்தைக்கு இந்த நிலைமை என்று பேசிக்கொண்டு இருக்க இது கார்த்திக்கின் காதில் விழுகிறது.

என்ன கலசம்: உடனே கார்த்திக் அவர்களிடம் சென்று கலசம் என்று பேசிக் கொண்டிருந்தீர்களே என்ன என்று கேட்க, என் கணவர் பணத்தாசை பிடித்தவர் யாரோ ஒரு திருடன் கலசத்தை திருடி கொண்டு வந்து பத்தாயிரம் ரூபாய்க்கு என் கணவரிடம் விற்று இருக்கிறான். அந்த கலசத்தை அவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு கம்பெனியிடம் விற்றுவிட்டார் என்று சொல்ல கார்த்திக், ரேவதி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்
கலசம் கிடைக்குமா: இதையடுத்து கார்த்திக் அந்த கலசத்தை தேடித்தான் நாங்கள் வந்தோம் என்று சொல்ல, சேட்டின் மனைவி கவலைப்படாதீங்க, நான் அந்த கலசத்தை வாங்கி உங்களிடம் கொடுக்கின்றேன். நீங்கள் அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு போங்க, நான் என் கணவரை அங்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல கார்த்திக்கும், ரேவதியும் காரை எடுத்துக் கொண்டு அங்கு செல்கின்றனர், அப்போது ரேவதி கலசம் கிடைக்குமா என வருத்தப்படுகிறாள்.
குடோனுக்கு வரும் கார்த்திக் கலசத்தை கேட்க அந்த வெளிநாட்டு நபர் கொடுக்க முடியாது என சொல்ல கார்த்திக் போலீசை கூப்பிடுவேன், அது எங்க வீட்டில் இருந்த கலசம் என்று சொல்ல பயந்து போன, அந்த நபர், அந்த கலசத்தை ஒரு சேட்டு தான் என்னிடம் விற்றார். அது திருட்டு பொருள் என்று எனக்கு தெரியாது, என்னை மன்னித்து விடுங்கள் என்று கார்த்திக்கிடம் கலசத்தை கொடுத்து விடுகிறான்.
வாக்கை நிறைவேற்றிய கார்த்திக்: கலசத்தை கொண்டு செல்வதற்காக ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, சந்திரகலா அந்த ட்ரைவர் எல்லாம் திரும்ப வர மாட்டான். அவன் தான் இதை திட்டம் போட்டு செய்தது என சொல்ல, மயில்வாகனம் உள்ளிட்டோர் கார்த்திக் வந்து விடுவான் என பேசுகின்றனர். ஊர் மக்கள் அனைவரும் கலசத்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல,சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வரும் கார்த்திக் கலசத்தை பூஜை அறையில் வைத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











