கலசத்துடன் கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கலசம் திருடுபோன நிலையில், கலசத்தை கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, சந்திரகலா அந்த ட்ரைவர் திரும்ப வர மாட்டான். கலசத்தை திருடியதே அவன் தான், அப்படி இருக்கும் போது, அவன் எப்படி கலசத்தை கொண்டு வருவான் என்று சொல்ல, மயில்வாகனம் உள்ளிட்டோர் கார்த்திக் வந்து விடுவான் என பேசுகின்றனர்.
ஊர் மக்கள் அனைவரும் கலசத்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல, சரியான நேரத்திற்கு வரும் கார்த்திக் கலசத்தை பூஜை அறையில் வைத்து விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கலசத்தை சாமுண்டீஸ்வரி மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வருவதை பார்த்த சிவனாண்டி அதிர்ச்சி அடைகிறான். கலசம் எப்படி வந்தது என்று தெரியாமல் குழப்பத்தோடு இருக்க, அப்போது, சாமுண்டீஸ்வரி, என்ன சிவனாண்டி கலசம் திருடு போயிடுச்சுனு நினைச்சியா என்று கிண்டலாக கேட்டுவிட்டு செல்ல, சிவனாண்டி, நாம தான் திருடினோம் என்று தெரிந்துவிட்டதா என்ற பயத்தோடு நிற்கிறான். இதையடுத்து, கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதால் சாமுண்டீஸ்வரிக்கு பெண் பட்டம் கட்டி, பெண்ணாக இருந்து கொண்டு கோவிலை கட்டி சாதித்து விட்டீர்கள் என்கின்றனர்.
பாராட்டும் ஊர்மக்கள்: அப்போது பேசும், சாமுண்டீஸ்வரி, பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்ககூடாது.. பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்கள் இல்லை அவர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவர்கள். பெண்களுக்காக இன்னொரு ஸ்கூல், காலேஜ் திறக்கப் போகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு ஃபேக்டரியையும் ஓபன் செய்து பெண்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்ன சொல்ல எல்லோரும் சாமுண்டீஸ்வரியை பாராட்டுகின்றனர். இதைப்பார்த்து கடுப்பான சிவனாண்டி, அங்கிருந்து கிளம்ப, அவனை சொடுக்கு போட்டு அழைத்த சாமுண்டீஸ்வரி, என்ன சிவனாண்டி பயந்து ஓடுற, நீ என்ன பிளான் போட்டாலும், அதை நான் முறியடிப்பேன் என்று சொல்ல, கடுப்பான சிவனாண்டி அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.
மானமே போய் இருக்கும்: இதையடுத்து, வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மட்டும் இல்லை என்றால் இன்று ஊர் மக்கள், முன் என்னுடைய மானமே போயிருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க. அப்போது அங்கு வரும், சந்திரகலா, அவன் தான் கலசத்தை திருடி கொண்டு போனான். அவன் உன் மானத்தை காப்பாற்றியதாக சொல்வது நம்புறமாதிரி இல்ல, அவன் சிவனாண்டியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கலசத்தை திருடி விட்டு, உன்னை காப்பாற்றியது போல நாடகமாடுகிறான் என்று சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, கார்த்திக் நாடகம் ஆடுவது போல எனக்கு தெரியவில்லை, என் உயிரை காப்பாற்றியது கார்த்திக் தான். அவன் நினைத்திருந்தால் என்னை பழி தீர்த்து இருக்கலாம். நான் கார்த்திக்கை முழுசாக நம்புகிறேன் என்று சொல்ல சந்திரலேகா என்ன செய்வது என்று தெரியாமல் மனதுக்குள் புலம்புகிறாள்.

நடக்கப்போவது என்ன : பின் சிவனாண்டி சந்திக்கும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்க அவ நம்மளை அவமானப்படுத்திட்டு போயிட்டா.. இந்த கலசம் எப்படி வந்தது என சிவனாண்டி கோபப்படுகிறான். சந்திரகலா கலசத்தை எடுத்தது நான் தான் என்பதை கார்த்திக் போட்டுக் கொடுத்து விடுவானோ என பயப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











