கார்த்திக்கிற்கு தீபா செய்த துரோகம்.. கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா வாந்தி எடுக்க செல்பி பாட்டி உண்மையாகவே தீபாவுக்கு விஷேஷம் தான் போல என்று கேட்க மீனாட்சி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, இன்னும் அவர்களுக்குள் நடக்க வேண்டியது எதுவும் நடக்கவில்லை என்கிறான்.
உடனே செல்பி பாட்டி அதான் ஸிண்டாக் இருக்கே, அதை பாலில் கலந்து கொடுத்து விட்டால் நடக்க வேண்டியது எல்லாம் தானா நடக்கும் என்று சொல்கிறார். அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலில் வயாகரா மாத்திரையை கலந்து கார்த்திக்கிற்கு கலந்து கொடுக்கிறார். தீபாவும், ஏதாவது நடக்கும் என்று காத்திருந்து ஏமாந்து போனாள்.

அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலை கொடுத்தியா? கார்த்திக் குடிச்சானா என்று கேட்க, கார்த்திக் அதை குடிக்கவே இல்லை என்ற உண்மையை உடைக்கிறான். ஆனால், வயாகரா மாத்திரியால், அருண், ஆனந்த், அருணாச்சலம் ஆகியோர் தவித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது செல்வி பாட்டி மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு சாப்பிட அந்த மோதிரம் காணாமல் போகிறது, பாட்டி பதற கார்த்திக் பயப்படாதீங்க மோதிரம் எங்கேயும் போயிருக்காது என்று சொல்லி கூல் செய்கிறான். பிறகு அந்த மோதிரத்தை எடுத்தது வெயிட்டர் தான் என்று கண்டு பிடிக்கிறான்.
மருமகள் பெயரில் ரெஸ்ட்டாரெண்ட்: அந்த வெயிட்டர் மோதிரத்தை அடகு வைக்க கார்த்திக் அவனை மிரட்டி மோதிரத்தை வாங்கி திருடிய வெயிட்டருக்கு அறிவுரை சொல்லி பணம் கொடுத்து வருகிறான், அடுத்ததாக கார்த்திக் இந்த ரெஸ்ட்டாரெண்டை வாங்கிடலாம். ஆனால் வீட்டு மருமகள்கள் பெயரில் வாங்கலாம் என்று சொல்ல அருண் நான் ஐஸ்வர்யா பெயரில் வாங்கலாம் என்று இருந்ததாக சொல்ல ஆனந்த் ஏன் மீனாட்சி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல மூன்று பேரும் ஒப்பு கொள்கின்றனர்.
தீபாவை மிரட்டும் சிதம்பரம்: கார்த்திக் நான் இந்த போட்டியில் ஜெயித்தால் மூன்று மருமகள்கள் பெயரில் வாங்க வேண்டும் என்று சொல்ல போட்டி தொடங்குகிறது. இந்த சமயத்தில் தீபாவுக்கு போன் செய்யும் சிதம்பரம் உடனடியா நீ வந்து பாடியாகணும். அப்படி வரலைனா கார்த்திக் உயிரோட இருக்க முடியாது. படகில் அவன் கூட போறது என்னுடைய ஆள் என்று மிரட்ட தீபா அதிர்ச்சி அடைகிறாள்.
போட்டி நடக்கும் இந்த கேப்பில் சிதம்பரத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று பாடி கொடுத்து விட்டு வருகிறாள். போட்டியில் கார்த்தியும் ஜெயிக்க அருணாச்சலம் இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











