சந்திரகலாவின் உண்மை முகம் தெரிந்தது.. மூன்றாவது எதிரி யார்? கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: கலசத்தை சாமுண்டீஸ்வரி மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வருவதை பார்த்த சிவனாண்டி அதிர்ச்சி அடைகிறான். கலசம் எப்படி வந்தது என்று தெரியாமல் குழப்பத்தோடு இருக்க, அப்போது, கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதால் சாமுண்டீஸ்வரிக்கு பெண்கள் அனைவரும் பட்டம் கட்டி, பெண்ணாக இருந்து கொண்டு கோவிலை கட்டி சாதித்து விட்டீர்கள் என்கின்றனர்.
அப்போது பேசும், சாமுண்டீஸ்வரி, பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்ககூடாது.. பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்கள் இல்லை அவர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவர்கள். பெண்களுக்காக இன்னொரு ஸ்கூல், காலேஜ் திறக்கப் போகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு ஃபேக்டரியையும் ஓபன் செய்து பெண்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்ன சொல்ல அனைவரும் சாமுண்டீஸ்வரியை பாராட்டுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரகலா கார்த்திக்கிற்கு நான் தான் கலசத்தை எடுத்தது என்ற உண்மையை நிச்சயம் தெரிந்து இருக்கும், அவன் மட்டும் அக்காவிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட்டால் என்ன செய்வது, நல்ல ஆளு கிட்ட போய் நீ கலசத்தை கொடுத்து இருக்க கடைசியில அவன் நம்மள இப்படி சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டான் என்று சொல்லி புலம்பிக்கொண்ட இருக்க, சிவனாண்டி அதெல்லாம் நடக்காது என அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறான்.
கார்த்திக் மீது பழிபோடும் சந்திரகலா: வீட்டிற்கு வரும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியுடம் இவனே திருடுவானாம், அவனே எடுத்துட்டு வருவானாம், இந்த கார்த்திக் மேல தான் எனக்கு சந்தேகமா இருக்கு. இவனும் சிவனாண்டியும் பேசிட்டு இருந்ததை நான் பார்த்து இருக்கேன். ஆனாலும் நீ அவனை தான் நம்பிகிட்டு இருக்க என்று, கார்த்திக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சந்திரகலா சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ரேவதி, சித்தி நீங்க திரும்பத் திரும்ப கார்த்திக் மேல பழிய போடுறிங்க, அந்த கலசத்தை எடுக்க நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு எங்களுக்கு தான் தெரியும்.
உண்மை தெரிந்தது: அந்த கலசத்தை யாரோ திருடி சேட்டு கிட்ட வித்துட்டாங்க அதை மீட்டு சரியான நேரத்திற்கு வீட்டுக்கு கொண்டு வந்தோம். அப்போ, நான் கார்த்திக் கூடத்தான் இருந்தேன். அதனால என்ன நடந்தது என்று எனக்கு நல்லாவே தெரியும் நீங்க ஏன் சும்மா சும்மா கார்த்திக் வேலையே பழி போட்டுட்டு இருக்கீங்க அமைதியா இருங்க என்று சொல்ல, இந்த வீட்டுல எனக்கு மரியாதையே இல்லை, இன்னும் கொஞ்ச நாள்ல, அவன் நான் தான் கலசத்தை எடுத்தேனு சொல்லுவான், நானும் சிவனாண்டியும் பேசிட்டு இருந்தோம் என என் மேல பழியை போடுவான் என பதற மயில்வாகனம் அவன் அப்படி சொல்லவே இல்ல, நீங்க ஏன் பதறுறீங்க என்று கேட்க சந்திரகலா சமாளித்து விடுகிறாள்.
சந்திரகலாவின் உண்மை முகம்: அப்போது பேசிய சாமுண்டீஸ்வரி, கார்த்திக் நீ என் மானத்தையும், கௌரவத்தையும் இந்த குடும்ப மானத்தையும் காப்பாத்திட்ட, அதே சமயம் உன் மேல ஒரு குற்றசாட்டு விழுந்து இருக்கு.. அதுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லனு நீ நிரூபிக்கணும் என சொல்கிறாள். அப்போது கார்த்திக் நிச்சயம் நான் அதை நிரூபிப்பேன் என்று சொல்லிவிட்டு அறைக்குள் வருகிறான். அப்போது அறைக்குள் வரும் மயில்வாகனம், இது எப்படி நடந்தது என கார்த்திக்கிடம் கேட்க கார்த்திக் விஷயம் தெரிந்தா வீட்டில் எல்லாரும் கஷ்டப்படுவாங்க, சந்திரகலா தான் என்று சொல்ல மயில் வாகனம் அதிர்ச்சியாகிறார். சந்திரகலா, சிவனாண்டி இல்லாமல் முகம் தெரியாத எதிரி யாரோ இருக்காங்க என்று சொல்கிறான்.
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க கார்த்திக்கும் சாப்பிட வர சந்திரகலா அவனை சாப்பிட விடாமல் நிற்க வைத்து அவமானப்படுத்துவது போல் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











