டாக்டரால், மாயா, மகேஷின் ரகசிய உறவு தெரியவருமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: சாமுண்டீஸ்வரி, கார்த்திக் நீ என் மானத்தையும், கௌரவத்தையும் இந்த குடும்ப மானத்தையும் காப்பாத்திட்ட, அதே சமயம் உன் மேல ஒரு குற்றசாட்டு விழுந்து இருக்கு.. அதுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லனு நீ நிரூபிக்கணும் வேண்டும் என சொல்கிறாள். அப்போது கார்த்திக் நிச்சயம் நான் அதை நிரூபிப்பேன் என்று சொல்லிவிட்டு அறைக்குள் வருகிறான். அப்போது அறைக்குள் வரும் மயில்வாகனம், இது எப்படி நடந்தது என கார்த்திக்கிடம் கேட்க கார்த்திக், விஷயம் தெரிந்தா வீட்டில் எல்லாரும் கஷ்டப்படுவாங்க, சந்திரகலா தான் என்று சொல்ல மயில் வாகனம் அதிர்ச்சியாகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், மகேஷ் மாயாவின் மடியில் படித்துக் கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்க, அப்போது மாயா, மகேஷ் நான் சொல்வதைக் கேள் இப்போ இந்த மாதிரி எல்லாம் நம்ம ரொமான்ஸ் பண்ண கூடாது யாருக்காவது நம்மளுடைய ரகசிய உறவு தெரிஞ்சு போச்சுன்னா. பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரேவதியிடம் இருந்து மகேஷுக்கு போன் வருகிறது. அப்போது ரேவதி, பந்தக்காலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துகிட்டு இருக்கு, நாளைக்கு நீங்களும் அண்ணியும் வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்

பதற்றத்தில் சந்திரகலா: மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து கார்த்திக்கிற்கு என் மேல சந்தேகம் வந்து சாமுண்டீஸ்வரி கிட்ட போட்டு கொடுத்துடுவானோனு பயமா இருக்கு, அவன் கலசத்தை எடுத்தது இந்த வீட்டில் இருக்கும் ஒருவர் தான் என்று சொல்கிறான் என்று புலம்ப சிவனாண்டி அப்படியெல்லாம் நடக்காது. நீ பயப்படாமல் இரு என்று சொல்லி போனை வைக்க, இங்கே சந்திரகலா திரும்ப, பின்பக்கமாக கார்த்திக் நின்று கொண்டிருக்க அதை பார்த்து ஷாக் ஆகிறாள். உடனே சந்திரகலா, நான் பேசுறதை ஒட்டு கேட்க வந்தியா என்று கேட்க, கார்த்திக் கேஷுவலாக அங்கிருந்து இல்லை என்று சொல்லி விட்டு நகர்கிறான்.

தங்கையின் கல்யாண பரிசு: ரேவதிக்கு அவரின் தங்கையின் தோழிகளிடம் இருந்து போன் வர, அதில், உங்க தங்கச்சியை பாட்டு காம்படிஷன்ல கலந்துக்க சொல்லுங்க. அவ கலந்துகிட்டா நிச்சயம் ஜெயிப்பாங்க நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறாள். இதை அடுத்து தங்கையின் ரூமுக்கு வரும் ரேவதி உனக்கு தான் அழகா பாட வரமே, நீ பாடு ஜெயிக்கணும் அதான் என்னோட ஆசை என்று சொல்ல, தங்கையும் கண்டிப்பா நான் பாடுறேன் அதுதான் உன்னோட கல்யாண பரிசு என்கிறாள்.
பயத்தில் மாயா: கார்த்திக் பந்தக்கால் நடுவதற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருக்க, அய்யரும் வந்து விட, சாமுண்டீஸ்வரி உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் டிரைவர் கிட்ட கேளுங்க என்று கார்த்திக்கை கை காட்டுகிறாள். அடுத்து மகேஷ் மற்றும் மாயா என இருவரும் இங்கு வந்து விடுகின்றனர், சாமுண்டீஸ்வரி ரோட்டையே பார்த்தபடி இருக்க மாயா, யாருக்காக காத்து இருக்கீங்க என்ற கேட்கிறாள். இப்போது சாமுண்டீஸ்வரி டாக்டர் வருவதாக சொன்னாங்க என்று சொல்ல மாயா மற்றும் மகேஷ் என இருவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். மாயா மகேஷை தனியாக அழைத்து சென்று நான் போய் அந்த டாக்டரை வர விடாமல் தடுக்கிறேன். என்னை பத்தி கேட்டா நீ எதையாவது சொல்லி சமாளி என்று கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











