தீபாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல மூன்று பேரின் சம்மதத்துடன் போட்டி நடக்கிறது. இதில் கார்த்திக் படகு போட்டியில் வெற்றி பெற்று விடுகிறான்.
இந்த நேரத்தில் தீபாவுக்கு போன் செய்யும் சிதம்பரம் உடனடியா நீ வந்து பாடியாகணும். அப்படி வரலைனா கார்த்திக் உயிரோட இருக்க முடியாது என்று மிரட்ட பயந்து போன தீபா. போட்டி நடக்கும் இந்த கேப்பில் சிதம்பரத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று பாடி கொடுத்து விட்டு வருகிறாள். படகு போட்டியில் கார்த்தியும் ஜெயிக்க அருணாச்சலம் இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ற தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

பிரச்சனை வேண்டாம்: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபாவிடம் எங்கே போய்ட்டீங்க என்று கேட்க கோவிலுக்கு போயிருந்ததாக சொல்லி சமாளிக்கிறார். பிறகு அதான் படகு போட்டியில ஜெயிச்சுட்டேனே மருமகள்களோட பெயர்ல இந்த ரெஸ்டாரண்ட் வாங்கிடலாமா என்று கார்த்தி கேட்க அருணாச்சலம் அண்ணன் தம்பிகளுக்குள்ள பிரச்சனை வேண்டாம் இப்போதைக்கு ரிசார்ட் வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று கூறி விடுகிறார்.
ஜாலி ட்ரிப் முடிந்தது: அதனைத் தொடர்ந்து கார்த்திக், தீபா ரூமுக்குள் இருக்கும்போது கார்த்திக் பல்லவிக்கு போன் போட போனை எடுக்காத காரணத்தினால் வாய்ஸ் மெசேஜில் அக்ரிமெண்ட் போட்ட மாதிரி வந்து நல்லபடியா பாடி கொடுங்க என்று சொல்ல இதைக் கேட்டு தீபா தர்ம சங்கடம் அடைகிறாள். பிறகு இவர்கள் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்ப கௌஷிக் இந்த மாதிரி குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டி வழி அனுப்பி வைக்கிறார். அடுத்து தீபா ஆபீஸ் வர ஸ்வேதா வழக்கம்போல வம்பிழுக்க தொடங்குகிறார்.
சிதம்பரம் மாஸ் என்ட்ரி: என்ன தீபா ரெண்டு மூணு நாளா ஆளே இல்ல சொல்லிட்டு லீவ் போட மாட்டீங்களா என்று கேட்க தீபா நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு தான் லீவு போட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். நேரம் பார்த்து சிதம்பரம் கார்த்திக் ஆஃபீஸ்க்குள் என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











