விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ரேவதி கல்யாணத்திற்காக கார்த்திக், பந்தக்கால் நடுவதற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருக்க, அய்யரும் வந்து விட, சாமுண்டேஸ்வரி உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் டிரைவர் கிட்ட கேளுங்க என்று கார்த்தியை கை காட்டுகிறாள். அடுத்து மகேஷ் மற்றும் மாயா என இருவரும் இங்கு வந்து விடுகின்றனர்,
சாமுண்டீஸ்வரி டாக்டர் வருவதாக சொன்னாங்க என்று சொல்ல மாயா மற்றும் மகேஷ் என இருவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். மாயா மகேஷை தனியாக அழைத்து சென்று நான் போய் அந்த டாக்டரை வர விடாமல் தடுக்கிறேன். என்னை பத்தி கேட்டா நீ எதையாவது சொல்லி சமாளி என்று கிளம்புகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் மாயா டாக்டர் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக மருத்துவமனைக்கு கிளம்பி வருகிறாள். மருத்துவமனையில் முக்காடு போட்டுக்கொண்டு மாயா அமர்ந்து இருக்க அப்போது தான், போன முறை வந்த போது மயக்க மருந்து பற்றி நர்ஸ் பேசியது நினைவுக்கு வர அதை எடுத்து வைத்துக்கொள்கிறாள். இதையடுத்து, மல்லிகா டாக்டர், சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருக்க மாயா டாக்டர் காரில் குளோரோபார்மை வைத்து விடுகிறாள். இதனால் டாக்டர் வரும் போது மயங்கி விடுவார் அதன் மூலமாக அவள் வருவதை தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டம் போடுகிறாள்.
பந்தக்கால் நடும் விழா: அடுத்து மாயா சாமுண்டீஸ்வரிக்கு வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்து பிறகு சரி பந்தக்கால் நட்டுவிடலாம் என முடிவு செய்கிறாள். மாயா ஒதுங்கி நிற்க சாமுண்டேஸ்வரி நீ விதவை என்பதால் ஒதுங்கி எல்லாம் நிற்க வேண்டாம் என்று சொல்கிறாள். மேலும் எனக்கு இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் உடன்பாடில்லை என சொல்லி மாயாவை பந்தக்கால் நட அழைக்கிறாள். நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிய மறுபக்கம் மாயாவின் திட்டத்தின் படி டாக்டர் வந்த கார் விபத்தில் சிக்குகிறது.

இன்று நடப்பதை பார்க்கலாம்: சாமுண்டீஸ்வரி டாக்டருக்கு போன் செய்ய போன் எடுக்காத நிலையில் அடுத்து நர்ஸ் போனை எடுத்து அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











