கார்த்திக்கை அவமானப்படுத்திய சிதம்பரம்.. உயிரை விட துணிந்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரெஸ்டாரண்ட்டில் இருந்து வீட்டுக்கு வருகிறார் அப்போது கார்த்திக், தீபாவின் முன்பாகவே பல்லவிக்கு போன் செய்கிறான். மேலும், வாய்ஸ் மெசேஜில் அக்ரிமெண்ட் போட்ட மாதிரி வந்து நல்லபடியா பாடி கொடுங்க என்று சொல்ல இதைக் கேட்டு தீபா தர்ம சங்கடம் அடைகிறாள்.
இதையடுத்து, தீபா ஆபீஸ் வர ஸ்வேதா வழக்கம்போல அவளை வம்பிழுக்க தொடங்குகிறார். என்ன தீபா ரெண்டு மூணு நாளா ஆளே இல்ல சொல்லிட்டு லீவ் போட மாட்டீங்களா என்று கேட்க தீபா நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு தான் லீவு போட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இந்த நேரம் பார்த்து சிதம்பரம் கார்த்திக் ஆஃபீஸ்க்குள் என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க என்ன போகிறது என்பதை பார்க்கலாம்

இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் இளையராஜாவிடம் பல்லவி பாடுவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறான். கோவிலுக்கு சென்று வந்ததாக சொல்லி பிரசாதத்துடன் மீனாட்சியும் இங்கு வர பிறகு ஆபீசுக்குள் வரும் சிதம்பரம் கார்த்திக்கிடம் பல்லவி பாடிய பாடலை காட்ட அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். சிதம்பரம் தெரியாம இந்த பீல்டுக்குள்ள வந்துட்டீங்களே தம்பி என்று சொல்லி அங்கிருந்து எழுந்து செல்ல கார்த்திக் கடுப்பாகிறான்.
தீபாவின் தற்கொலை முடிவு: இளையராஜா கார்த்திக்கிடம் பேச போக என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்று சத்தம் போட எல்லோரும் கிளம்பி வெளியே வந்து விடுகின்றனர். என்னால் தான் கார்த்திக்கிற்கு இந்த அவமானம் என்று தவிக்கும் தீபா இங்கிருந்து வெளியே கிளம்ப மீனாட்சி அவளை பின் தொடர்ந்து செல்கிறாள். தீபா முருகன் கோவில் சென்று இனிமேலும் என்னால் பொய் சொல்லி வாழ முடியாது என்று தற்கொலை முயற்சி செய்ய முடிவெடுக்கிறாள். அப்போது அவளை பின் தொடர்ந்து வரும் மீனாட்சி இதற்கான காரணங்களை நிரூபித்து கார்த்தி உடன் நீ வாழ வேண்டும் என தீபாவின் மனதை மாற்றி அங்கிருந்து அழைத்து செல்கிறாள்.
பல்லவி செய்தது நம்பிக்கை துரோகம்: அடுத்ததாக கார்த்திக் தீபா வீட்டுக்கு வர அபிராமி இடம் பல்லவி சிதம்பரத்திற்காக பாடிய விஷயத்தை சொல்ல இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று கோபப்படுகின்றனர். ரூமுக்கு வந்த கார்த்தியும் பல்லவி இப்படி செய்திருக்கக் கூடாது என புலம்ப தீபா அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையோ என்னவோ என்று சொல்ல எப்படி இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லி இருக்கலாம். இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று சொல்கிறான்.


Click it and Unblock the Notifications











