தடை பட்ட பரிகாரம்.. போலி சாமியாரை சுற்றி வளைத்த போலீஸ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், இன்றைய எபிசோடில், பரிகாரம் செய்யும் இடத்திற்கு வரும் ரம்யா, தீபா வந்து கொண்டு இருக்க. தீபாவை மரப்பெட்டியில் உட்கார வைத்து மலையில் இருந்து உருட்டி விடுகிறாள். இதையடுத்து, ஏய் தீபா எதாவது உதவி வேண்டும் என்றாலும் சொல்லு என்று கூறி விட்டு, அப்படி சொல்லுவேனு நினைச்சியா தீபா. இந்த கயிற்றை நான் விட போகிறேன். அப்படியே தண்ணீரில் அடித்துக்கொண்டு போய் கடலில் கலந்து செத்துப்போடி என்று சொல்ல, பெட்டியில் இருக்கும் தீபா நான் என்ன துரோகம் செய்தேன் என்று கேட்பது போல ரம்யா கனவு காண்கிறார்.

மறுபக்கம் கார்த்திக் தீபாவின் செல்போன் டவர் மூலம் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட கார்த்திக், அந்த இடத்தை தேடி அலைகிறான். அப்போது, ஒரு சாமியாரிடம், இந்த அருவி எதாவது இருக்கா என்று கேட்க, ஆமாம் இருக்கு, ஆனால், நீங்க தாண்டி வந்துட்டீங்க, ஒரு கிலோ மீட்டர் பின்னாடி போன அருவி இருக்கு என்று சொல்கிறார். இதையடுத்து கார்த்திக் அந்த சாமியாரிடம், இந்த இடத்தில் சந்தேகப்படும்படி சாமியார் யாரையாவது பாத்தீங்களா என்று கேட்க, ஆமாம் இரண்டு நாளா இந்த இடத்தில் ஒரு சாமியார் சுற்றிக்கொண்டு இருந்தார் என்று சொல்ல, கார்த்திக் அந்த இடத்தில் இருந்து வேகமாக புறப்படுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீஸ்க்கு தகவல் வருகிறது. இதையடுத்து, ஒரு டீம் மலைப்பகுதிக்கு வருகின்றனர். கால் சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட போலி சாமியார், பரிகாரம் பூஜைக்கு செய்த ஏற்பாட்டை அப்படியே விட்டு ஒளிந்துக்கொள்கிறான். அப்போது அந்த இடத்திற்கு வர, பூஜை போட்டு இருப்பதை பார்த்த போலீஸ் கள்ள சாராயம் காய்ச்சுவதே தவறு, இதுல அதுக்கு பூஜை வேற என்று கோபப்பட்டு கத்திவிட்டு, சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும் தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல போலீஸ் லத்தியை தட்டி தட்டி தேடுகின்றனர்.

ஜெயிலுக்கு போக வேண்டியது தான்: அடுத்து போலீஸ் அந்த பொருட்கள் எல்லாவறையும் பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர். இதைப்பார்த்த சாமியார், ரம்யாவுக்கு போன் செய்து, அவள் எடுக்காமல் இருக்க திரும்ப திரும்ப போலி சாமியார் போன் செய்து கொண்டே இருக்க கடுப்பான ரம்யா காரில் இருந்து இறங்கி நாங்க அங்கே தான் வந்து கொண்டு இருக்கிறோம். எதுக்கு இப்படி அடிக்கடி போன் பண்ற என்று சொல்லி கத்த, மேடம் இந்த இடத்தில் போலீசார் ரவுண்ட் பண்ணி இருக்காங்க, நீங்க இங்கே வந்தா இரண்டு பேரும் சேர்ந்து ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என்று சொல்கிறான்.

பரிகாரத்திற்கு வந்த சிக்கல்: அது மட்டும் இல்ல மேடம், பரிகாரத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த எல்லா பொருளையும் போலீசார் எடுத்துட்டு போய்ட்டாங்க, நாளைக்கு புதுசா செட்டப் செய்து தீபாவையும் போட்டு தள்ளிடலாம் என்று சொல்ல ரம்யா தீபாவிடம் டைம் ஆகிருச்சு என்பதால் சாமியார் நாளைக்கு பரிகார பூஜையை செய்து கொள்ளலாம் என்று சொல்வதாக சொல்கிறாள். ஆனால் தீபா அத்தையோட உயிரை காப்பாத்தணும் அதனால் இன்னைக்கே பரிகாரம் செய்து விடலாம் என்று அடம் பிடிக்க ரம்யா சாமியாருக்கு போனை செய்து சமாளிக்க சொல்லி தீபாவிடம் போனை கொடுக்கிறாள்.

போலி சாமியார் சிக்குவாரா: இதையடுத்து சாமியார், இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் செய்யணும், இனிமே செய்தால் அது தீய பலனை தான் தரும், உங்க அத்தையோட உயிரை காப்பாற்ற நான் பூஜை பண்றேன். பரிகாரத்தை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சொல்ல தீபா யோசித்து ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X