கார்த்திக்கு நேர்ந்த அவமானம்.. பொங்கி எழுந்த ரேவதி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: சென்னைக்கு வரும் கார்த்திக், தனது அம்மாவின் சொத்துக்களை பிரிந்து அதை பத்திரமாக பதிவு செய்கின்றனர். இதை தொடர்ந்துக்கொண்ட முத்து மற்றும் சிவனான்டி அந்த ஆதாரத்தை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணத்தை கொடுத்து. கார்த்திக் கையெழுத்து போட்டதை ஆதாரமாக எடுத்து வருகின்றனர். கார்த்திக் தான் டிரைவர் ராஜா என்பதற்கான சரியான ஆதாரம் இப்போ நம்ப கையில் மாட்டி இருக்கு, இதை வைத்தே அவன் கதையை முடித்து விடலாம்என்கின்றனர்.
மறுபக்கம், ஸ்வாதி பார்ட்டிக்கு செல்ல அவளது தோழி அவளை வரவேற்று சரக்கடிக்க சொல்கிறாள். ஸ்வாதி எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்று சொல்ல ஜூஸில் சரக்கை கலந்து கொடுத்து விடுகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் பர்த்டே பார்ட்டிக்கு வர அப்போது அங்கிருந்தவர்கள் கார்த்தியை ட்ரைவர் என கிண்டலடித்து பேசுகின்றனர். இதைப்பார்த்த ரேவதி கடுப்பாகி, ஸ்டைலாக உடை அணிந்து, நன்றாக ஆங்கிலத்தில் பேசினால், அதுதான் நாகரீகம் என்று நினைக்கிறீர்களா? முதலில் மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்வது தான் நாகரீகம், இவர் வேட்டி சட்டை அணிந்து இருப்பதால் அவரிடம் சீப்பாக நடந்து கொள்வீர்களா? நீங்கள் அனைவரும் அவரை எவ்வளவு கிண்டல் செய்தும் அவர், உங்களிடம் கோபப்படாமல் இருக்கிறார். குணத்தில் உங்களை விட இவர் பெரியவரா... இல்லை நீங்கள் பெரியவரா? படித்தால் மட்டும் பத்தாது அனைவரையும் சமமாக நடத்தும் குணம் வளர வேண்டும். இல்லையென்றால் படித்திருந்தும் நீங்களும் முட்டாள் தான். இவரைப் பற்றி உங்கள் அனைவருக்கும் என்ன தெரியும்... இனிமேல் இவரை பற்றி ஏதாவது தவறாக பேசினீர்கள் என்றால், நான் மனுசியாகவே இருக்க மாட்டேன் என்று கோபத்தில் காத்த, அப்போது ரேவதியின் தோழிகள் அனைவரும் ரேவதியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.
குழந்தையை காப்பாற்றிய கார்த்திக்: இதையடுத்து, பர்த் டே பேபி கையில் மருதாணி வைத்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு சிறிய ரூமுக்குள் விளையாட போய் ரூம் லாக்காகி மாட்டி கொள்கிறான். வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குழந்தையை காணவில்லை என்று தேட தொடங்குகின்றனர். ரூமுக்குள் குழந்தையை தேள் கொட்ட மயங்கியும் விடுகிறது. வெளியில் கார்த்திக் குழந்தை ரூமுக்குள் சென்றிருக்க தான் வாய்ப்பிருக்கு என எண்ணி கதவை திறக்க தேள் கொட்டி மயங்கி கிடப்பது தெரிய வருகிறது. உடனே டாக்டருக்கு போன் செய்து முதலுதவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு, அதன்படியே கார்த்திக் முதல் உதவி செய்து குழந்தையை காப்பாற்றுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











