தீபாவிற்கு விஷம் கொடுத்த ரம்யா.. அடுத்தடுத்த ட்விஸ்ட்..- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,ரம்யா, தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல திடீரென அவளுக்குள் ஒரு சக்தி வருவதை அடுத்து, அவள் ரம்யாவை கழுத்தை பிடித்து பேரருக்குள் இறங்கி மூடி போட்டு மூடி மலையில் இருந்து தள்ளி விடுகிறாள். மறுபக்கம் தீபாவை தேடி வரும் கார்த்திக் ஒரு கட்டத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உருண்டு வரும் பேரரை பிடித்து திறந்து பார்க்க அதற்குள் ரம்யா இருக்கிறாள்.
கார்த்திக்கை பார்த்த ரம்யா இவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதற அவன் ஒரு கம்பெனியோட முதலாளி நீங்க இப்படி செய்யலாமா என்று கேட்க கார்த்திக் பேசுவதை வைத்து அவனுக்கு உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளும் ரம்யா தீபாவுக்காக நான் தான் பரிகாரத்தை பண்ணேன் என்று பிளாட்டை மாற்றி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன ஆனது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக்கை தீபா இருக்கும் இடத்திற்கு ரம்யா அழைத்து வர, அங்கு தீபா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதைப்பார்த்து பதறிப்போன கார்த்திக் அவளை எழுப்புகிறான். அப்போது மெதுவாக எழுந்திருக்கும் தீபா,
எனக்கு என்னாச்சு, இங்க என்ன நடந்தது? என்று கேட்க கார்த்திக், உனக்கு பதிலாக ரம்யா பரிகாரம் செய்ததாக சொல்ல தீபா, நீ எதுக்கு பரிகாரம் பண்ண என்று கோபப்படுகிறாள். பிறகு நீ தான் என்ன பண்ண சொன்ன என்று சொல்லி தீபாவை நம்ம வைக்கிறாள்.
குழப்பத்தில் தீபா: அதன் பிறகு இவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டிற்கு வருகின்றனர், தீபா கோவிலுக்கு வந்து பெண் சாமியார் ஒருவரை சந்திக்கிறாள். இந்த மாதிரி பரிகாரம் செய்ய போய் இருந்தேன், ஆனால் என்னால் பரிகாரம் செய்ய முடியவில்லை என்று சொல்ல சாமியார் நான் தான், உன்னை தடுத்தேன் என்று சொல்கிறார். எதுக்கு என்னை தடுத்தீங்க என்று கேட்க உங்க அத்தையை காப்பாற்றும் ஷக்தி உன்கிட்டயே இருக்கு என்று சொல்ல தீபா குழப்பம் அடைகிறாள்.
திட்டம் போட்ட ரம்யா: என்ன சொல்றீங்க சாமி என்று கேட்க ஆமாம் உன்னுடைய குரலால் மனமுருகி, இந்த அம்மனை நினைத்து, பாட்டு பாடி அந்த கலைவாணி மனதை குளிர வை.. அவ உன்னுடைய அத்தையை காப்பாற்றி குடுப்பா என்று சொல்ல தீபா பாட முடிவெடுக்கிறாள் இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ரம்யா, தீபா பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். அவளை கொலை செய்யலாம் என்று பார்த்தா, எப்படியோ தப்பிச்சிட்டா, இந்த விஷயத்தை விட மாட்டேன் என்று மனதிற்குள் ஒரு திட்டம் போடுகிறாள்.
தீபாவை கொல்ல அடுத்த திட்டம்: உடனே தனது அடியாளுக்கு போன் செய்து விஷத்தை கொண்டு வர சொல்லி பானகத்தில் கலந்து கொடுத்து தீபாவை குடிக்க சொன்னால் அவளால் பாட முடியாமல் போய் விடும் என்று திட்டம் போடுகிறாள். அதே போல் விஷத்தை கலந்து கொடுக்க தீபாவும் குடிக்க போகும் சமயத்தில் அங்கு வந்த பெண் சாமியார் தீபா எனக்கு என்று கேட்டு பானகத்தை வாங்கி கொண்டு தீபாவை பாட சொல்லி அனுப்பி வைக்கிறாள். அந்த பெண் சாமியார் பானகத்தை குடிக்க குடிக்க ரம்யாவுக்கு நெஞ்சு ஏறிய ஆரம்பிக்க அவள் பயந்து நடுங்கி ஓடுகிறாள். தீபா கலைவாணியை குளிர வைக்க பாட்டு பாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











