மனம் உருகி பாடிய தீபா.. கண் திறக்கும் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பரிகாரம் செய்யாததால், வருத்தத்தில் இருக்கும் தீபா, கார்த்திக்கிடம் அழுதுக்கொண்டு வர, இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது அந்த சாமியாரிடம் பரிகாரம் செய்ய, என்ன சொல்றீங்க சாமி என்று கேட்க ஆமாம் உன்னுடைய குரலால் மனமுருகி, இந்த அம்மனை நினைத்து, பாட்டு பாடி அந்த கலைவாணி மனதை குளிர வை.. அவ உன்னுடைய அத்தையை காப்பாற்றி குடுப்பா என்று சொல்ல தீபா பாட முடிவெடுக்கிறாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ரம்யா, தீபா பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுக்க தீபா குடிக்க போகும் சமயத்தில் அங்கு வந்த பெண் சாமியார் தீபா எனக்கு என்று கேட்டு பானத்தை வாங்கி கொண்டு தீபாவை பாட சொல்லி அனுப்பி வைக்கிறாள். அந்த பெண் சாமியார் பானத்தை குடிக்க குடிக்க ரம்யாவுக்கு நெஞ்சு ஏறிய ஆரம்பிக்க அவள் பயந்து நடுங்கி ஓடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி குணமடைய வேண்டி தீபா மனமுருகி பாடுகிறாள்.கோவிலில் தீபா கண்கலங்கி பாடிக்கொண்டு இருக்க அபிராமிக்கு உடலில் அசைவுகள் ஏற்படுகிறது. தீபா கோவிலில் பாடி முடித்ததும் மருத்துவமனையில் அபிராமி கண் திறக்கிறாள். இந்த விஷயத்தை கேள்விபட்டு அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு ரம்யா நான் பரிகாரம் செய்ததால் தான் நீங்க பொழச்சீங்க என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறாள். இதைக் கேட்டு தீபா வருத்தப்படுகிறாள். அதை கவனித்த கார்த்திக், அம்மா குணமாக உங்களுடைய பாட்டு தான் காரணம் என்று எனக்குத் தெரியும் என்று தீபாவிறகு ஆறுதல் சொல்கிறான்.

வருத்தப்படும் கார்த்திக்: அதைத்தொடர்ந்து கார்த்திக் அபிராமியின் அருகில் அமர்ந்து கொண்டு, எல்லா பிரச்சனையும் முடிஞ்சி போச்சு, நீங்க கூடிய சீக்கிரம் பழைய படி திரும்பி வீட்டுக்கு வரணும், அப்போது தான் அது வீடாகவே இருக்கும், நீங்க இல்லாமல் வீடு வீடாகவே இல்லை என்று கண்கலங்கி மிகவும் உருக்கமாக பேசுகிறான். அதன் பின், கார்த்திக் தீபாவை வீட்டுக்கு அழைத்து செல்லும் போது, நீங்க ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தீர்களே எதுக்கு அப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தீங்க என்று கேட்க அத உங்களுக்கு மட்டுமில்லாமல் ரம்யாவுக்கும் அனுப்பி இருந்தேன் என்கிறாள்

சாமியாரை தேடும் கார்த்திக்: அத்தைக்கு இப்படி ஆனதும், எனக்கு என்ன செய்வது என்றே தெரியல, அப்போது மைதிலி அண்ணி தான் செங்கல் பட்டில் ஒரு சாமியார் இருக்கிறார் என்று சொன்னாங்க, ஆனால், அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்கு தெரியாததால், நான் ரம்யாவிடம் சாமி யார் என்பது குறித்து சொன்னேன். அவள் தான் சாமியாரை தேடிப்பிடித்தாள். அவள் தான் பரிகாரம் குறித்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறாள். தீபா சொன்னதை கேட்டு, இது பின்னாடி யாரோ ஒருத்தர் இருக்கிறார். யார் அந்த சாமியார் என்று கார்த்திக் மனதிற்குள் பல கேள்விகளை கேட்டு சாமியார் பற்றி விசாரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X