சுவாதி மேல் விழுந்த திருட்டு பழி.. சந்திரகலாவிடம் சிக்கிய ஆதாரம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சுவாதியை சென்னையில் நடக்கும் பாட்டு போட்டிக்காக கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் அழைத்து வருகின்றனர். முதல் சுற்றில் சுவாதி நன்றாக பாடி விட, இவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கு என்று அனைவரும் எதிர்பார்க்கிறனர். இதே பாட்டு போட்டியில், தொழில் அதிபர் ஒருவரின் மகளும் கலந்து கொள்கிறாள். தொழிலதிபரின் மகளை விட, சுவாதி நன்றாக பாடுவதால், அவளுக்கு இந்த போட்டியில் நாம் வெற்றி பெறுவோமோ என்கிற பயம் வந்து விடுகிறது.
இதுகுறித்து, தனது தந்தையிடம் சொல்லி வருத்தப்படுகிறாள். உடனே, தொழிலதிபர், கார்த்திகை அழைத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒழுங்காக வெளியேறி விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று மிரட்டுகிறார். அவரின் மிரட்டலுக்கு பயப்படாத கார்த்திக், திறமைக்கு தான் இங்கு முக்கியத்துவம், பணத்திற்கு இல்லை. உங்கள் மகள் திறமையோடு இருந்தால், நிச்சயம் அதில் அவர் வெற்றி பெறுவார் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதனால், எப்படியாவது சுவாதியை இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தொழிலதிபர் ஒரு திட்டம் போடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சுவாதி கச்சேரிக்கு ரெடியாகி கொண்டிருக்க, கார்த்தி ரேவதியிடம் எல்லாம் ஓகே தானே என்று கேட்க அவளும் ஓகே என சொல்கிறாள். கார்த்திக் தனியாக இருப்பதால் அவனிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கும் ரேவதி தனது மனதில் இருப்பதை பேசி விட்டு, திரும்ப கார்த்தி போன் கால் வந்ததால், தள்ளி சென்றது தெரிய வருகிறது. இதனால் இந்த முறையும் காதலை சொல்ல முடியாமல் ரேவதி ஏமாற்றம் அடைகிறாள்.
அடுத்து நடப்பது என்ன: மறுபக்கம் சுவாதி ரெடியாகிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து அறையில் இருந்து ஒரு குழந்தை தனியாக விளையாட அந்த குழந்தையுடன் கொஞ்சி பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் ரூம் பாய் முருகன் குழந்தையின் நகை ஒன்றை திருடி அதை சுவாதி பையில் வைத்து விடுகிறான். பிறகு இவர்கள் கச்சேரிக்கு கிளம்பி வர ரேவதி, எனக்கு தலை வலியா இருக்கு காபி வேண்டும் என்று கேட்க கார்த்திக் வாங்கிட்டு வர செல்கிறான். இந்த இடைப்பட்ட கேப்பில் போலீஸ் ஓட்டலுக்கு வரும் போலீஸ், சுவாதியிடம் விசாரித்து, அவளின் பையை சோதனைப்போட அதில் நகை இருக்கிறது. இதைப்பார்த்து சுவாதி பதறிப்போய், நான் எடுக்கவில்லை, இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது என்று சொல்கிறாள். உடனே போலீஸ் இதை நீ போலீஸ் ஸ்டேஷன் வந்து சொல்லு என கூறி சுவாதியை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.
சந்திரகலாவிற்கு கிடைத்த ஆதாரம்: இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திக், இது யாரோ செய்த சதி என்பதை தெரிந்து கொண்டு, சிசிடிவி காட்சியை பார்க்கிறான். அதில், ரூம் பாய் தான் குழந்தையின் நகையை எடுத்து சுவாதியின் பையில் போட்டது தெரியவருகிறது. மற்றொரு பக்கம், சந்திரகலாவிடம், கார்த்திக் , ரிஜிஸ்டர் ஆபிசில் பத்திரத்தில் கையெழுத்து போட்ட வீடியோவை எடுத்து வைத்து இருப்பாதை காட்டுகிறான். மேலும், ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து, அந்த பத்திரத்தையும் எடுத்து வந்து காட்டுகிறான். இதைப்பார்த்த சந்திரகலா, இது ஒன்று போதும், அந்த கார்த்தியை வீட்டை விட்டு துரத்த என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











