கார்த்திக் வைத்த செக்மேட்.. நொடி பொழுதில் தப்பிய ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யாவை சந்திக்கும் கார்த்திக், தீபா பரிகாரம் குறித்து எல்லா விஷயத்தையும் என்னிடம் சொல்லிட்டாங்க, எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும், சாமியாரிடம் கூட்டிப்போனதே நீங்க தான், அப்புறம் ஏன் இது பற்றி என்னிடம் சொல்லவில்லை என்று கேட்க, தீபாவுக்காக செய்ததாகவும் சாமியார் தான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லிவிட்டதாகவும் சொல்கிறாள்.
இதையடுத்து, கார்த்திக் அந்த சாமியார் மேல எனக்கு சந்தேகமா இருக்கு அவரை நான் பார்க்கணும் என்று சொல்ல ரம்யா பதற்றம் அடைகிறாள். இந்த சாமியார் ஒரு இடத்தில் இருக்க மாட்டார் எங்கையாவது போய்விடுவார் என்று சொல்ல, அவர் எங்கே போனா என்ன, அவர் இருந்த இடம் தெரியும்ல வாங்க அங்கே போகலாம் என்று சொல்ல, ரம்யா இப்போது முடியாது என்று சொன்னால், நல்லா மாட்டிக்கொள்வோம், இப்போது கார்த்திக்கூட போவது தான் சரி என்று முடிவு செய்து கிளப்புகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கக்போகிறது என்றுபார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்திக், ரம்யா இருவரும் சாமியார் இருந்த இடத்திற்கு வருகின்றனர். அங்கு யாரும் இல்லாததால், என்ன ரம்யா இந்த இடத்தில் யாருமே இல்லை என்று சொல்ல. அது தான் கார்த்திக் எனக்கும் தெரியவில்லை என்று நாடகமாடுகிறாள். முதலில், இந்த இடம் யார் பெயரில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறான். ரம்யா அந்த நிலத்தின் ஓனரை பார்த்து பேசி பணத்தை கொடுத்து செட்டப் செய்து இருந்ததால், கார்த்தியுடன் சென்றால் மாட்டி கொள்வோம் என்று பயப்படுகிறாள். இருந்தாலும் வேறு வழியின்றி கிளம்பி செல்கிறாள். ஓனர் பெயர் வெங்கையா என்று தெரிய வர அடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வருகின்றனர்.
ஏமாற்றிய ரம்யா: வெங்கையாவும் ரம்யா கார்த்தியுடன் வருவதை பார்த்ததும், வாங்க மேடம் என்று கூப்பிட ரம்யா பதற்றம் அடைகிறாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக்கு ஒரு போன் வர அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் ரம்யா பணத்தை கொடுத்து எதையும் சொல்லிடாதே என்று வெங்கையாவை தனது வழிக்கு கொண்டு வருகிறாள். இதனால் கார்த்திக் ஏமாற்றத்துடன் ஹாஸ்பிடல் திரும்ப தீபா கார்த்திக்காக சமையல் செய்து வைத்து காத்திருப்பதாக ரம்யாவிடம் சொல்ல அவள் கார்த்தியை வீட்டிற்கு போக விட கூடாது என்று முடிவெடுக்கிறாள்.
மைதிலி சொன்ன உண்மை: மறுபக்கம் வீட்டுக்கு வரும் கார்த்திக்கிடம் மைதிலி, நடப்பது எல்லாம் எதுவுமே சரியில்லை எனக்கு ரம்யா மீது சந்தேகமா இருக்கு, அவ எதுக்கு யாருக்கும் தெரியாம தீபாவை பரிகாரம் செய்ய அழைத்துப்போக வேண்டும் என்று கேட்கிறாள். எனக்கும் அதே சந்தேகம் தான் இருக்கு என்று சொல்லும் கார்த்திக். தம்பி, ரம்யா உங்கள் மீது ஆசைப்படுகிறாள், அதற்கு இடையூறாக இருக்கும் தீபாவின் கதையை முடிக்க பார்க்கிறாள். இதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறாள். இதுபற்றி தீபாவிடம் சொன்னால், அவ நம்பவில்லை. நீங்க பார்த்து இருக்க என்று மைதிலி சொல்ல, கார்த்திக் கம்பெனியில் ரம்யா மோதிரம் போட்டது, பைக்கில் வந்தது என அனைத்தையும் நினைத்துப்பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











