சந்திரகலா போட்ட பிளான்.. ஆதாரத்தை அழித்த ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் திருட்டு பழி போட்டு சுவாதியை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். இதைதெரிந்து கொண்ட கார்த்திக், அங்கிருக்கும் சிசிடிவியை ஆதாரத்தை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வருகிறார். இதை பார்த்த காவலாளி பொய்யான புகாரை கொடுத்து வீண் பழியை இந்த பெண்ணின் மீது போட்டு விட்டார்கள் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சொல்லி சுவாதியை அனுப்புகிறார்.

இதையடுத்து இன்றைய, எபிசோடில் கார்த்திக், ரேவதி மற்றும் சுவாதி என அனைவரும் வெளியே வருகின்றனர். அப்போது, சோகமாக இருக்கும் சுவாதி, இனிமேல் எனக்கு பாட்டு போட்டி எல்லாம் தேவையில்லை. நான் வீட்டிற்கு சென்று விடுகிறேன். எனக்கு மட்டும் பிரச்சனை வந்தால் பரவாயில்லை என்னோடு சேர்த்து, உங்களுக்கும் பிரச்சனை வருகிறது. எனக்கு எதுவும் தேவையில்லை மாமா, நம்ம ஊருக்கே போய்விடலாம் என்கிறாள். அப்போது கார்த்தி, இது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை சுவாதி, ஒருவர் நம்மை முடக்க நினைக்கிறார். உன்னுடைய திறமை வெளியே வரக்கூடாது என்று நினைகிறார். அவர்கள் முன்னால் நீ நன்றாக பாடி பரிசை பெற வேண்டும். அதுதான், அவர்களுக்கு நீ கொடுக்கும் சரியான அடி, உண்மையான வெற்றியும் அது தான் என சொல்ல சுவாதியிடம் பாடுவதற்கு ரெடியாகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: ஒரு பக்கம் கச்சேரியில் கிருஷ்ணனின் மகள் முடித்தம், நிகழ்ச்சியை முடித்துவிடும் படி கிருஷ்ணன் சொல்ல, நிகழ்ச்சி முடிக்கப்படுகிறது. அப்போது, அங்கு வரும் கார்த்திக், சுவாதியை பாடியே ஆக வேண்டும் என சொல்கிறார். ஆனால், கிருஷ்ணன் நேரம் முடிந்துவிட்டது, இதற்கு மேல் யாரும் பாடமுடியாது என்று சொல்கிறார். இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடைய சண்டை நடந்து கொண்டு இருக்க, அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டால்,சுவாதியை பாட அனுமதிக்கிறார். இதில், சுவாதி நல்லபடியாக பாடி முடித்து வெற்றியும் பெறுகிறாள். பாட்டு நிகழ்ச்சி முடிந்து கார்த்திக் மற்றும் ரேவதி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, ரேவதிக்கு சுவாதிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறாள். இதைப்பார்த்த சந்திரகலா என்ன விஷயம் என்று கேட்க சும்மாதான் என்று சொல்லி சமாளிக்கிறாள் ரேவதி.

இதைத்தொடர்ந்து சந்திரகலா, ரேவதியை தனியாக கூப்பிட்டு கார்த்திக் இனிமேல் இந்தவீட்டில் இருக்க முடியாது, அவன் தான் ராஜசேதுபதியோட மகன் என்பதற்கான ஆதாரம் என்னுடைய போனில் இருக்கு. அந்த வந்ததும், அந்த ஆதாரத்தை காட்டி, கார்த்தியை இந்த வீட்டை விட்டே அனுப்புகிறேன் என்கிறாள். இதைக் கேட்ட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். சந்திரகலா சித்தி சும்மாவே இருக்கமாட்டாங்க போல, இவங்களுக்கு ஏன் கார்த்திக் மீது இவ்வளவு வன்மம். எதற்கு அவரை இந்த வீட்டைவிட்டுஅனுப்ப வேண்டும் என நினைக்கிறார்கள் என்ற தெரியவில்லை என யோசிக்கிறார். எப்படியாவது அந்த வீடியோவை டெலிட் செய்துவிடலாம் என திட்டம் போடும் ரேவதி, சந்திரகலாவுக்கு தெரியாமல் போனை எடுத்து, அந்த வீடியோ ஆதாரத்தை அழிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X