நாச்சியாருக்காக கார்த்திக் செய்த பரிகாரம் நடந்தது என்ன.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கிற்கு அந்த போலி சாமியார் மீது சந்தேகம் வர, ரம்யாவை அழைத்துக்கொண்டு சாமியார் இருந்த இடத்திற்கு வருகின்றனர். அங்கு யாரும் இல்லாததால், என்ன ரம்யா இந்த இடத்தில் யாருமே இல்லை என்று சொல்ல. அது தான் கார்த்திக் எனக்கும் தெரியவில்லை என்று நாடகமாடுகிறாள்.

இதையடுத்து, தீபாவிற்கு போன் செய்யும் ரம்யா, வீட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்க என்று சொல்ல, அவள் கார்த்திக்கிற்காக சமைத்து வைத்து இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் மைதிலி போனை புடுங்கி கட் செய்துவிட்டு எதுக்கு எல்லா விஷயத்தையும் ரம்யா கிட்ட சொல்லுற அவ தப்பானவ என்று சொல்லி, அவ என் பிரண்டு அவளை பற்றி தப்பா பேசாதீங்க என்று கோவித்துக்கொண்டு செல்கிறாள். இதை தெரிந்து கொண்ட ரம்யா, கார்த்திக்கை வீட்டிற்கு போக விட கூடாது என்று பிளான் போட்டு, ஹஸ்பிடலுக்கு போன் செய்து, ஒரு நர்ஸிடம் அபிராமி கண்விழுத்துவிட்டதாக கார்த்திக்கிடம் சொல்லும் படி சொல்ல சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் அபிராமியை பார்த்துவிட்டு, அவள் கண் திறக்காததால், அங்கே அப்படியே இடிந்து போய் இருக்கிறான். பின் லேட்டாக வீட்டிற்கு வர, தீபா சோபாவில் படுத்தபடி தூங்கி கொண்டிருக்க கார்த்திக் அவளை டிஸ்டர்ப் செய்யாமல் போர்வையை போர்த்தி விட்டு சென்று விடுகிறான்.

ரம்யாவின் வேலை: மறுநாள் காலையில், நான் நர்ஸ் பேசுறேன், நேத்து நீங்க சொன்ன மாதிரியே செய்து விட்டதாக சொல்கிறாள். நான் என்ன சொன்னேன் என்று தீபா குழப்பமாக மீனாட்சிக்கும் மைதிலிக்கும் இது ரம்யாவின் நாடகம் என்பது தெரிய வருகிறது. இருந்தாலும் அவர்கள் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். இதையடுத்து, தீபா, ரம்யாவிக்கு போன் செய்து, யாரோ ஒரு பிராடு போன் பண்ணி வேலை பார்த்து விட்டு இருக்காங்க என்று சொல்லி பேச ரம்யா ஷாக்காகி. ஓ... நர்ஸ் இவளுக்கு மாத்தி போன் பண்ணிட்டா போல என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருப்பதாக சொல்லி நழுவி கொள்கிறாள்.

இதையடுத்து, அபிராமி கண் திறக்காததால் கார்த்திக் வருத்தத்தில் இருக்க, அப்போது கண் முன் தோன்றும் ஒரு பெண்சாமியார், நீ ஒரு வேண்டுதலை வச்ச நியாபகம் இருக்கா என்று கேட்க பிளாஷ்கட்டில் கார்த்திக் தனது அம்மா கண் திறக்காமல் உங்களை கும்பிட மாட்டேன் என்று சொல்லிய விஷயம் நினைவுக்கு வர, அவன் சாமிக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு கிளம்பி செல்கிறான். அங்கு அனைவரும் நடபிரதசனம் செய்து கொண்டு இருக்க கார்த்திக்கும் அதை செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X