உண்மை தெரிய வருமா? ஜெயிலுக்கு போகும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், போலி சாமியார் சேகர், ரம்யாவின் வீட்டிற்கு வந்து சந்திக்கிறான். அப்போது, ரம்யா, நான் உனக்கு பணம் தரேன், கொஞ்சம் நாளைக்கு இந்த ஊர்ல இருக்காதா, கார்த்திக் உன்னைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறான். இதனால், நீ இந்த ஊரை விட்டு போய்விடு என்று சொல்கிறான்.

இதையடுத்து, பைக்கிள் வரும் போலி சாமியார், பைக்கிள் வந்து கொண்டிருந்த போலி சாமியார் சேகர் மீது இடிக்க இருவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது. இங்கு வந்த போலீசார் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடுகின்றனர். உடனே போலிசாமியார் சேகர், ரம்யாவுக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்ல இளையராஜா கார்த்திக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திக் தீபம்: இன்றைய சீரியலில், ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக் போலீசிடம் பேசி இளையராஜாவை வெளியே கொண்டு வர, சேகர் என் மேடம் வருவாங்க என்று ஓவர் பில்டப்பாக கொடுக்க இந்த நேரம் ரம்யா, கார்த்தி இருப்பதை கவனிக்காமல் உள்ளே வந்து விடுகிறாள், கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியாகும் ரம்யா, என்ன கார்த்திக் இங்கே என்று கேட்க, கார்த்திக், இளையராஜாவிற்கும் சேகருக்கு சண்டை போட்ட விஷயத்தை சொல்லுகிறான். இவன் தான் போலி சாமி என்கிற விஷயம் தெரிந்து விட்டால் அவ்வளவு தான் என்று பதற்றத்தில் இருக்கும் ரம்யா, போலிசாமியார் சேகருக்கு பளார் என்று அறைவிட்டு, ஒழுங்க இரு என்று சொல்விட்டு, சேகர் என்னுடைய பழைய தொழிலாளி என்று சொல்லி சமாளிக்கிறாள்.

இளையராஜாவிடம் சிக்கிய பை: சேகர் மற்றும் இளையராஜா என இருவரும் ஒரே மாதிரி கட்டைப்பையை கொண்டு வந்திருக்க இருவரும் பேக்கை மாற்றி எடுத்து செல்கின்றனர், சேகர் பையில் டோப்பா, ஒட்டு தாடி என சாமியார் வேடத்திற்கு பயன்படுத்திய பொருட்களாக இருக்கிறது. அந்த பையை எடுத்துக்கொண்டு இளையராஜா கார்த்திக்குடன் காரில் வர பேக்கில் இருக்கும் பொருட்களை பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிறுகிறது. :

டிஸ்ஜார்ஜ் ஆன அபிராமி: மறுபக்கம் அபிராமியை பார்க்க வந்த பரமேஸ்வரி எதுக்கு எனக்கிட்ட சொல்லல என்று கேட்க கார்த்திக் தான் உங்களுக்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் வருத்தப்படுவீங்கன்னு சொன்னதாக சொல்கிறாள். டாக்டர் அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்வதோடு அவங்களுக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்ல கூடாது எனவும் வார்னிங் கொடுக்க கார்த்திக் என்கிட்ட சொன்ன இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X