தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ஆனந்த்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், ரோட்டில் சண்டை போட்டு சேகர் மற்றும் இளையராஜா போலீஸ் சென்ற நிலையில், அங்கு சேகருக்காக ரம்யா வந்து பேசி அழைத்து செல்கிறாள். அதே போல இளையராஜாவிற்காக கார்த்திக் வந்து அழைத்து செல்கிறார். சேகர் மற்றும் இளையராஜா இருவரும் ஒரே மாதிரி கட்டை பையை கொண்டு வந்திருக்க இருவரும் பையும் மாறி விடுகிறது. சேகர் பையில் டோப்பா, ஒட்டு தாடி என சாமியார் வேடத்திற்கு பயன்படுத்திய பொருட்களாக இருக்கிறது. அந்த பையை எடுத்துக்கொண்டு இளையராஜா கார்த்திக்குடன் காரில் சென்று விடுகிறான்.
சேகர், விக் கடைக்கு சென்று பை திறந்து பார்க்கையில் அதில் டோப்பா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து ரம்யாவின் வீட்டிற்கு வந்து, பை மாறிய கதையை சொல்ல, கடுப்பான ரம்யா, சேகருக்கு நாலு அறைவிட்டு, இங்கிருந்து ஓடிவிடு என்று கத்திவிட்டு, இளையராஜா வீட்டில் இருக்கும் பையை எடுக்க, இளையாராஜா வீட்டிற்கு வருகிறாள். ஆனால், இளையராஜா அந்த பையை கார்த்திக்கின் காரிலேயே விட்டுவிட்டு சென்றுவிட இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில் தீபா, ஐஸ்வர்யா, மீனாட்சி அனைவரும் ஹஸ்பிடலுக்கு சென்று அபிராமியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இவர்கள் பாம்பு வந்ததால், ஜோசியர் சில நாட்கள் வேறு வீட்டில் மாறி இருக்கும்படி கூறியதால், அனைவரும் வேறு வீட்டில் வசித்துவந்தனர். தற்போது, பழைய வீடு சரி செய்யப்பட்டு, அந்த வீட்டில் அனைவரும் குடியேறி உள்ளனர்.
மன்னிப்பு கேட்க: மறுபக்கம், இளையராஜா வீட்டில் இருக்கும் ரம்யா எப்படியாவது, இவனை வெளியில் அனுப்பிவிட்டு, அந்த பையை எடுத்துவிடவேண்டும் என்று பிளான் போட்டுக்கொண்டு இருக்க, அந்த நேரம் கார்த்திக்கிடம் இருந்து இளையராஜாவிற்கு போன் வருகிறது. அப்போது, இளையராஜா, கார்த்திக், போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த ரம்யா மேடம் வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று சொல்கிறார். இதையடுத்து அவங்க ஏன் வந்தாங்க என்று கேட்க, மன்னிப்பு கேட்க வந்தாங்க என்று சொல்ல, சரி நானும் இப்போது உன் வீட்டுக்குத்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனை கார்த்திக் வைக்கிறான்.

கதையை பார்த்துக்கொள்ளுங்கள்: இதையடுத்து, இளையராஜா, ரம்யா மேடம் கார்த்திக் இங்கே தான் வந்து கொண்டு இருக்கிறார் என்றதும் டென்ஷனா ரம்யா, அய்யோ அவர் வருவதற்குள் போகவேண்டும், அதற்கு பிறகு இந்த பை கதையை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு வெளியே போய் காரில் அமர்ந்து வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறாள்.
கார்த்திக்கிற்கு வலுக்கும் சந்தேகம்: பின் கார்த்திக், இளையராஜா வீட்டிற்கு வந்து ரம்யா எங்கே என்று கேட்க, இப்போத்தான் கிளப்புனாங்க என்று சொன்னதும், மன்னிப்பு கேட்கவா இவ்வளவு தூரம் வந்தாங்க என்னால நம்பவே முடியல, எல்லாமே ஏதோ சந்தேகமாவே இருக்கு என்று கார்த்திக் சொல்ல, இளையராஜா, இவங்கள பார்த்தா சந்தேகப்படுகிற மாதிரி தெரியவில்லை, பாரு மன்னிப்பு கேட்க இவ்வளவு தூரம் வந்து இருக்காங்க என்று சொல்ல, அது தான் சந்தேகத்திற்கு காரணம் என்று கார்த்திக் சொல்லிவிட்டு இருவரும் காரில் ஏறி வெளியில் கிளம்பி விடுகின்றனர்.

மறுபக்கம் வீட்டில், அபிராமி, ஆனந்திடம் தாலியை எடுத்து கொடுத்து அதை ஐஸ்வர்யா கழுத்தில் கட்ட சொல்ல, ஆனந்த் அதை ஐஸ்வர்யா கழுத்தில் கட்டிவிட்டு கண்கலங்குகிறார். என்னை மன்னித்துவிடு ஐஸ்வர்யா, நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டேன், மறுபடி என்னை நீ ஏத்துக்கவே மாட்டேனு நினைச்சேன் ஆனால், நீ என்னை ஏத்துக்கிட்ட என்று கண்கலங்கி ஆனந்த் பேச அவளை ஐஸ்வர்யா சமாதானம் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











