ரம்யா பற்றி கார்த்திற்கு தெரிய வந்த உண்மை.. அடுத்து நடப்பது என்ன.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், போலி சாமியாரின் பையை தேடி இளையராஜா வீட்டிற்கு வீட்டிற்கு வருகிறாள். இளையராஜா கூல் வாங்க வெளியில் போன நேரத்தில் வீடு முழுக்க தேடியும் பை கிடைக்காததால் கடுப்பாகிறாள். ஆனால், அந்த பை கார்த்தியின் காருக்குள் இருக்கிறது.

இதையடுத்து, இளையராஜா, ரம்யா வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சொல்ல, இதுக்க இவ்வளவு தூரம் வந்தாங்க என்னால நம்பவே முடியல, எல்லாமே ஏதோ சந்தேகமாவே இருக்கு என்று கார்த்திக் சொல்ல, இளையராஜா, இவங்கள பார்த்த சந்தேகப்படுகிற மாதிரி தெரியவில்லை, பாரு மன்னிப்பு கேட்க இவ்வளவு தூரம் வந்து இருக்காங்க என்று சொல்ல, அது தான் சந்தேகத்திற்கு காரணம் என்று கார்த்திக் சொல்லிவிட்டு இருவரும் காரில் ஏறி வெளியில் கிளப்பி விடுகின்றனர். மறுபக்கம் அபிராமி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வருகிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்காம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திக் தீபா சீரியல்: இன்றைய எபிசோடில் பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு அபிராமியை பார்க்க வந்த ரம்யா அவர் டிஸ்சார்ஜ் ஆகிபோய்விட்டதால், கோவப்பட்டு பூங்கொத்தை தூக்கி எறிகிறாள். இதையடுத்து, தீபாவிற்கு போன் செய்ய அவள் வீட்டில் இருப்பதாக சொல்ல வீட்டிற்கு வருகிறாள். இதையடுத்து. ரம்யா பொக்கேவை கொடுத்து நான் உங்களுக்காக பரிகாரம் செய்ததால் தான் நீங்க உயிர் பிழைத்தீங்க என்று சொல்கிறாள்.

தீபாவை பாட்டுபாட சொல்கிறாள்: உடனே, அபிராமி அப்படியெல்லாம் இல்ல.. நான் கோமாவில் தீபா பாடிய பாட்டு என் காதில் கேட்டது என்று சொல்ல ரம்யா அது எப்படி உங்களுக்கு கேட்கும் என்று கேள்வி எழுப்ப, அபிராமி அந்த பாட்டை பாடி காட்ட கார்த்திக் தான், தீபா இதே பாட்டை தான் கோவிலில் பாடினா என்று சொல்கிறான். அடுத்து தீபாவை அதே பாட்டை மீண்டும் பாட சொல்லி அதை கேட்டு ரசிக்கின்றனர். அங்கு தீபா பாட பாட ரம்யாவிற்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வருகிறது. மேலும், நீ செய்தது பரிகாரமே இல்ல, எந்த சாமியாரும் இப்படி ஒரு பரிகாரத்தை செய்ய மாட்டான். அவன் நிச்சயம் போலி சாமியாராகத்தான் இருக்க முடியும் என்று சொல்கிறாள்.

வசமாக சிக்கிய ரம்யா: மறுபக்கம், கார்த்திக், போலிசாமியாருக்கு இடம் கொடுத்த செங்கையாவிற்கு போன் செய்து, உங்க இடத்தில் ஒரு போலிசாமியார் இருந்தாருல்ல அந்த இடத்திற்கு யார் அட்வான்ஸ் கொடுத்தது என்று கேட்க, அதுவா சார் ஒரு பெண்ணுதான் வந்து அட்வான்ஸ் கொடுத்தாங்க , அவங்க பெயர் ரம்யா என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். அவங்கள போட்டோவில் காண்பித்தா அடையாளம் சொல்லுவீங்களா என்று கேட்க நிச்சயம் சொல்லுவேன் சார் என்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X