டிரைவரா வரவன் எல்லாம் மாப்பிள்ளையா? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை எபிசோடில், மயில்வாகனம் ரோஹிணிக்கு சத்தமான உணவு பொருட்களை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்வதை கவனித்த சந்திரகலாவுக்கு ஏதோ சந்தேகம் உருவாகிறது. ரோகினி உண்மையில் கம்பமாக இருக்கிறாளா இல்லை என்பதை தெரிந்த கொள்ள, பப்பாளி பழத்தை கொடுத்து கர்ப்பத்தை கலைக்க திட்டமிட்டு, ரோகிணியை சாப்பிட சொல்கிறாள். அந்த நேரத்தில், ரேவதி உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைக்கிறாள். அதன் பிறகு சந்திரகலா கார்த்தியை சிக்க எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து இந்த வீட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என திட்டம் போடுகிறாள். இதனால், வீட்டில் இருந்து பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்து மறைத்து வைத்துவிடுகிறாள். ரேவதி இதை எதார்ச்சையாக பார்த்து விடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், அதாவது சூலையில் வேலை செய்பவர்கள் சிலர் வீட்டுக்கு வந்து புதிய சூலை ஆரம்பிக்க கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்க சாமுண்டீஸ்வரி பணத்தை எடுப்பதற்காக உள்ளே செல்கிறாள். சந்திரகலா ஏற்கனவே இந்த பணபப்பையை திருடிய நிலையில் சாமுண்டீஸ்வரி பணத்தை காணவில்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சந்திரகலா எனக்கு ஒருத்தர் மேல சந்தேகமா இருக்கு டிரைவர் ராஜா தான் பையை எடுத்து இருக்கணும் என பழி போடுகிறாள். இதைத்தொடர்ந்து ரேவதி கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேச சந்திரகலா ஷாக் ஆகிறாள்.

கார்த்திகை தீபம்: பின் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், யார் அதிகமா பணம் கொடுக்குறாங்களோ அவங்கதான் ஊர் தலைவராக முடியும் என்று சொல்கிறான். இந்த முறையும் க சாமுண்டீஸ்வரியிடம் வைத்தியை தலைவர் பதவியில் நிற்க வைக்க உள்ளார். இதற்காக 25 லட்சம் ரூபாயை கட்டி இருக்கிறார் என்று சொர்கிறார். பின் ஊர் மக்கள் அனைவரும் அவரே தலைவராக இருக்கட்டும் என்று சொல்ல, அப்போது அங்கு வரும் சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை எதிர்த்து நிற்க தேர்தலில் நாமினேஷன் செய்ய அங்கே சாமுண்டீஸ்வரி வர இருவருக்கும் இடையே ஒரு சவால் உருவாகிறது.
காத்திருக்கும் அதிர்ச்சி: மறுபக்கம் துர்காவை பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்து, வைர மோதிரம் வாங்கினோம் அதை உங்களிடம் காட்டுவதற்கான வந்தோம் என்று சொல்லி மோதிரத்தை காட்டுகின்றனர். ஆனால், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத துர்கா அந்த மோதிரத்தை வாங்கி கூட பார்க்கவில்லை. இதை கவனித்த சந்திரகலா இதை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறாள். உடனே சிவனாண்டியை சந்தித்து துர்காவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, அவளுக்கு டிரைவர் நவீனைத்தான் பிடித்து இருக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இதை காரணமாக வைத்து, துர்காவை இந்த வீட்டை விட்டு ஓட வச்சுட்டா.. பொண்ன்னையே பாத்துக்க முடியாத சாமுண்டீஸ்வரி எங்கே ஊரை பாத்துக்க போறாங்க என்று சொல்லி தேர்தலில் நிற்பதை தடுத்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











