கோவிலில் தப்பு செய்தாங்க.. துர்கா,நவீன் மீது விழுந்த அசிங்கமான பழி.. கார்த்திகை தீபம்!
சென்னை: துர்காவை பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்து, வைர மோதிரம் வாங்கினோம் அதை உங்களிடம் காட்டுவதறக்க வந்தோம் என்று சொல்லி மோதிரத்தை காட்டுகின்றனர். ஆனால், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத துர்கா அந்த மோதிரத்தை வாங்கி கூட பார்க்கவில்லை. இதை கவனித்த சந்திரகலா இதை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறாள். உடனே சிவனாண்டியை சந்தித்து துர்காவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, அவளுக்கு டிரைவர் நவீனைத்தான் பிடித்து இருக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இதை காரணமாக வைத்து, துர்காவை இந்த வீட்டை விட்டு ஓட வச்சுட்டா.. மகளையே பாத்துக்க முடியாத சாமுண்டீஸ்வரி, இந்த ஊரை, ஊர் மக்களை எப்படி பாத்துக்க போகிறாள் என்று சொல்லி தேர்தலில் நிற்பதை தடுத்து விடலாம் என்று கணக்கு போடுகிறான்.
கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திக் ரேவதி ரூமுக்குள் இருக்க ரேவதி கட்டிலிலும் கார்த்திக் தரையிலும் படுத்திருக்க திடீரென கார்த்திக் ஆஸ்திரேலியா எப்போ போறீங்க என்று கேட்கிறான். ரேவதி போக மனசில்லை என்பதை வெளியே சொல்லாமல், ரோகினி இப்போ கர்பமாக இருக்கிறாள், அதுமட்டுமில்லாமல் துர்காவிற்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கு இந்த நேரத்தில் நான் எப்படி ஊருக்கு போக முடியும், இன்னும் கொஞ்சம் டைம் ஆகும் என்று சொல்கிறாள். அதன் பின், ரேவதி கார்த்தியை பெட்டில் படுத்து கொள்ள சொல்ல, கார்த்திக் வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். ரேவதி கார்த்தியை காதலுடன் பார்த்தபடி எப்போத்தான் என்னுடைய காதலை உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை என புலம்புகிறாள்.

வீட்டை விட்டு ஓடிய துர்கா: மறுபக்கம், சந்திரகலா, துர்காவிடம் நீ அந்த நவீனை காதலிப்பது எனக்கு நன்றாக தெரியும், ஆனால், உன் அம்மா ஒரு பிடிவாதக்காரி, அவன் நினைத்தது மட்டும் தான் இந்த வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பாள், இன்னும் இரண்டு நாளில் உனக்கு நிச்சயம் நடக்கப்போகுது, மனசில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னோருத்தனுக்கு கழுத்த நீட்டப்போறியா என்று கேட்கிறாள். மேலும், நினைச்சவனை கைபிடிக்க வேண்டும் என்றால், வீட்டை விட்டு ஓடி போய்ட்டு அவனை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்து என்று உசுப்பேற்றி விடுகிறாள்.
கோவில் தப்பு செய்துட்டாங்க: இதையெல்லாம் கேட்டு, மனசு குழம்பிப்போன துர்கா, நவீனுக்கு ஃபோன் செய்து கோவிலுக்கு வரசொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதைப்பார்த்த சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து இதை வைத்து சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். பின் நவீன், துர்கா இருவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கே வரும் சிவனாண்டியின் ஆட்கள் இருவரையும் துரத்த இருவரும் கோவிலுக்குள் தஞ்சமடைகின்றனர். அப்போது, சிவனாண்டி கோவிலுக்குள் வைத்து கதவை அடைகிறான். இதையடுத்து, சிவனான்டி, சாமுண்டீஸ்வரையும் கோவிலுக்கு வர வைத்து,உன்னோட மகள் துர்கா கோவில் தப்பு செய்துவிட்டாள், அவளின் லட்சனத்தை பார், அவள் யாருமே இல்லாத கோவில், நவீனுடன் இருக்கிறாள். நான் தான் இருவரும் கையும் களவுமாக பிடித்தேன் என்கிறான். கோவில் கதவு திறக்கும் நேரத்தில், கார்த்திக் கோவிலுக்குள் புகுந்து துர்கா நவீனை தப்பிக்க வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











