தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறவே ஏறாது.. ஜோசியர் போட்ட குண்டு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு அபிராமியை பார்க்க வந்த ரம்யா அவர் டிஸ்சார்ஜ் ஆகிபோய்விட்டதால், கோபப்பட்டு பூங்கொத்தை தூக்கி எறிகிறாள். இதையடுத்து, தீபாவிற்கு போன் செய்ய அவள் வீட்டில் இருப்பதாக சொல்ல வீட்டிற்கு வருகிறாள்.

மறுபக்கம், கார்த்திக், போலிசாமியாருக்கு இடம் கொடுத்த செங்கையாவிற்கு போன் செய்து, உங்க இடத்தில் ஒரு போலிசாமியார் இருந்தாருல்ல அந்த இடத்திற்கு யார் அட்வான்ஸ் கொடுத்தது என்று கேட்க, அதுவா சார் ஒரு பெண்ணுதான் வந்து அட்வான்ஸ் கொடுத்தாங்க , அவங்க பெயர் ரம்யா என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். அவங்கள போட்டோவில் காண்பித்தா அடையாளம் சொல்லுவீங்களா என்று கேட்க நிச்சயம் சொல்லுவேன் சார் என்கிறார். இப்படியான நிலையில் இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரம்யாவுக்கு போன் செய்யும் வெங்கையா. என்னம்மா நீங்க கார்த்திக் சார்கிட்ட மாத்தி பொய் சொல்ல சொல்லிடீங்க, இதனால் எனக்கு எந்த பிரச்னையும் வராதா என்றுகேட்க, அதெல்லாம் எதுவும் வராது நான் பார்த்க்கொள்கிறேன் நீங்க எதுக்கும் பயப்படத் தேவையில்லை என்று பேசி விட்டு திரும்பும் போது அங்கே மைதிலி நிற்பதை பார்த்து பேசுவதை கேட்டு இருப்பளோ என்று பயப்படுகிறாள். மேலும் மைதிலி யாரிடம் பேசிட்டு இருந்த ரம்யா, என்று கேள்வி கேட்க ஆபிஸ் கால் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள்.

தீபாவை பாராட்டிய ஐய்யர்: இதையடுத்து, அபிராமி தீபாவுடன் கோவிலுக்கு வந்து தாலியை கொடுத்து தனக்காக தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்லி மறு தாலி கட்ட பூஜை செய்ய வேண்டும் என்று பேசுகிறாள். அய்யரும் மாமியார் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தாலியை கழட்டும் மருமகளை நான் பார்த்ததே இல்ல என்று தீபாவை பாராட்டுகிறார். அடுத்து கோவிலில் இருந்து ஜவுளி கடைக்கு வரும் அபிராமி தீபாவுக்கு பட்டு புடவை கார்த்திக்கு பட்டு வேட்டி சட்டையை எடுக்கிறாள்.

தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறாது: மறுபக்கம் தர்மலிங்கம், தீபாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, ஜோசியர் ஒருவரிடம் நேரம் எப்படி இருக்கு என்று கேட்க அவர் இந்த பொண்ணு கழுத்தில் இருந்து தாலி இறங்கினா அது திரும்பவும் ஏறவே ஏறாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார், தர்மலிங்க என்ன சாமி சொல்றீங்க என்று அதிர்ச்சியாக ஆமாம், நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த பொண்ணு கழுத்தில் இறங்கிய தாலி திரும்பவும் ஏறாது. அப்படியே ஏறினா இவளோட மாமியார் உயிருக்கு ஆபத்து வரும் என்று அதிர வைக்கிறார்.

அதிர்ச்சியில் தர்மலிங்கம்: தாலி இல்லனாலும் இந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா தான் இருக்கும், அதை அப்படியே விட்டுடுங்க என்று சொல்கிறார். ஆனால், தர்மலிங்கம் திரும்பவும் தாலி ஏறுவதை பார்க்கணும் என்று ஆசையை சொல்ல, ஜோசியர் ஒரு தேதியை குறித்து கொடுத்து முயற்சி பண்ணி பாருங்க, தாலி ஏறலனா திரும்பவும் என்னை வந்து பாருங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X