காணாமல் போன தாலி.. ஜோசியர் வாக்கு பலிச்சிடுச்சா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் அபிராமி தீபாவுடன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து விட்டு இருவரும் ஜவுளி கடைக்கு சென்று கல்யாணத்திற்கு தீபாவுக்கு பட்டு புடவை, கார்த்திக்கிற்கு பட்டு வேட்டி சட்டையை எடுக்கிறாள்.
மறுபக்கம் தர்மலிங்கம், தீபாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, ஜோசியர் ஒருவரிடம் நேரம் எப்படி இருக்கு என்று கேட்க அவர் இந்த பொண்ணு கழுத்தில் இருந்து தாலி இறங்கினா அது திரும்பவும் ஏறவே ஏறாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த பொண்ணு கழுத்தில் இறங்கிய தாலி திரும்பவும் ஏறாது. அப்படியே ஏறினா இவளோட மாமியார் உயிருக்கு ஆபத்து வரும் என்று அதிர வைக்கிறார். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு இருக்க தர்மலிங்கம் பதற்றத்துடனே இருக்கிறார். இதையடுத்து, அபிராமி எடுத்து கொடுத்த பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டி சட்டையை அணிந்து கொண்டு ஜோடியாக இருவரும் கீழ வருகின்றனர். கார்த்திக், தீபா கீழே வரும் நேரத்தில் ரம்யா என்ட்ரி கொடுக்க அபிராமி உன் ப்ரண்ட் தானே போய் தீபாவை நீயே மேடைக்கு கூட்டிட்டு வா என்று அனுப்பி வைக்கிறாள்.
காணாமல் போன தாலி: அதன் பிறகு ரம்யா தீபாவை மணமேடைக்கு அழைத்து வர அய்யர் மாலையை கொடுத்து இருவரையும் மாற்றி கொள்ள சொல்ல அதே போல் கார்த்திக் தீபாவுக்கு மாலை போட தீபா கார்த்திக் கழுத்தில் மாலையை போடுகிறாள். அய்யர் நல்ல முகூர்த்த நேரம் தான் தாலியை கட்டிடலாம் என்று சொல்ல தாலி காணாமல் போய் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீடு முழுக்க தாலியை தேடுகின்றனர், முகூர்த்த நேரம் முடிய போகும் நேரம் வரை தேடியும் தாலி கடைக்காமல் இருக்க அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் கட்ட முடியாது, நல்ல நேரம் முடிந்து விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார்.
வசமாக மாட்டும் ரம்யா: இதை தொடர்ந்து மைதிலி தாலி எங்க போச்சுனு எனக்கு தெரியும், இந்த ரம்யா கையில் தான் இருக்கு என்று சொல்ல அவளும் ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











