தாலி எனக்குத்தான்.. ரம்யா போட்ட பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு இருக்க தர்மலிங்கம் ஜோசியர் சொன்னதை நினைத்து பதற்றத்துடனே இருக்கிறார். இதையடுத்து, அபிராமி எடுத்து கொடுத்த பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டி சட்டையை அணிந்து கொண்டு மேடைக்கு வருகின்றனர்.
அய்யர் மாலையை கொடுத்து இருவரையும் மாற்றி கொள்ள சொல்ல அதே போல் கார்த்திக் தீபாவுக்கு மாலை போட தீபா கார்த்திக் கழுத்தில் மாலையை போடுகிறாள். அய்யர் நல்ல முகூர்த்த நேரம் தான் தாலியை கட்டிடலாம் என்று சொல்ல தாலி காணாமல் போய் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீடு முழுக்க தாலியை தேடுகின்றனர், முகூர்த்த நேரம் முடிய போகும் நேரம் வரை தேடியும் தாலி கடைக்காமல் இருக்க அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் கட்ட முடியாது, நல்ல நேரம் முடிந்து விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வீடு முழுக்க தாலியை தேடியும் கிடைக்காததால், நல்ல நேரம் முடிந்து விட அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் பயன் இல்ல என்று சொல்லிவிட்டு செல்ல, கடுப்பான மைதிலி தாலி எங்க இருக்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்லி, ரம்யாவின் கைப்பையில் தேட அதில் தாலி இருக்கிறது. அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து எதற்கு இப்படி பண்ண என்று கேட்க என்ன சொல்வது என்று தடுமாறும் ரம்யா. டக்கென்று ஒரு விஷயத்தை யோசனை செய்கிறாள்.
தீபாவின் ஆசை: இந்த தாலியை நான் எடுத்ததற்கு காரணம் இருக்கு, தீபா கல்யாணமான போது எப்படி மருமகளா இந்த வீட்டிற்கு வந்தாளோ அதே மாதிரி, பெரிய மண்டபத்தில் அனைவரையும் அழைத்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டா அதுக்காக தான் இப்படி பண்ணேன் என்று சொல்லி சமாளிக்கிறாள். உடனே அபிராமி, தீபாவிடம் ரம்யா சொல்வது உண்மையா என்று கேட்க, அவள் ஆமாம் எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு, ஆனால் ரம்யா இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல என்று சொல்கிறாள்.
பயத்தில் தர்மலிங்கம்: இதையடுத்து, அபிராமி, என் மருமகள் தீபா ஆசைப்படியே கல்யாணத்தை பெரிய மண்டபத்தில் செய்து விடலாம் என்று சொல்ல, தர்மலிங்கத்திற்கு ஜோசியர் சொன்னது நினைவுக்கு வர,அதெல்லாம் வேண்டாம், அவ கழுத்தில் தான் மஞ்ச கயிறு இருக்கே அதை அப்படியே விட்டுடலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா ஏன் கல்யாணம் பண்ணா செலவாகும்னு யோசிக்கிறீர்களா என்று கேள்வி கேட்க, அபிராமி இடையில் புகுந்து பணத்தை பத்தி எல்லாம் நீங்க கவலையே படாதீங்க என்று சொல்கிறாள்.
நிச்சயம் கல்யாணம் நடக்கும்: இருந்தாலும் தர்மலிங்கம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்க, ஜானகி எதுக்கு வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டதும் ஜோசியர் சொன்ன விஷயத்தை சொல்ல அபிராமி இதை பின்னாடி நின்றிருந்தது கேட்டு விடுகிறாள். பிறகு இவ்வளவு தான் விஷயமா அதெல்லாம் கவலைப்படாதீங்க. இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











