கார்த்திக்கை உருகி உருகி காதலிக்கும் ரேவதி.. காதல் நிறைவேறுமா? கார்த்திகை தீபம்!
சென்னை: கோவிலுக்குள் பூட்டப்பட்டிருந்த துர்கா மற்றும் நவீனை காப்பாற்றி பின்பக்க வழியாக அழைத்து வருகிறான். அதன் பிறகு, துர்காவை வீட்டிற்கு அழைத்து வர ரேவதி அவளிடம் கோபப்பட்டு அறைகிறாள். இன்னொரு முறை இப்படி பண்ணாத, உனக்கும் நவீனுக்கும் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று எல்லாத்தையும் உன் மாமா ராஜா பார்த்துக்கொள்வார் என்று வாக்குறுதி கொடுக்கிறாள். கார்த்திக் துர்கா நவீன காப்பாற்றிய விஷயம் அறிந்த சிவனாண்டி அடுத்த திட்டமாக நவீனை கடத்த பிளான் போட்டு கிளம்புகிறான். இந்த விஷயம் தெரிந்த, கார்த்திக், சிவனாண்டிக்கு முன்பாக அங்கு வந்து நவீனை காப்பாற்றுகிறான். சிவனாண்டியை அடித்து ஓட விட்டு நவீனுக்கும் துர்காவுக்கு தான் நிச்சயம் நடக்கும் என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறான்.
அதாவது, பரமேஸ்வரி பாட்டி ரேவதியை கோவிலுக்கு வர சொல்ல, ரேவதி, பாட்டியை சந்திக்க, நாளைக்கு கார்த்திக்கிற்கு நாளைக்கு பிறந்த நாள் என்று சொல்ல ரேவதி சந்தோஷ் அடைகிறாள். இதனால், கார்த்தியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிடுகிறாள். இதையடுத்து, ஜானகி ரோட்டில் நடந்து செல்ல அந்த வழியாக வந்த சந்திரகலா காரில் இடித்துவிட, அவள் கீழே விழுந்து அடிபடுகிறாள். இதையடுத்து சந்திரகலா ஜானகியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாள்.

கார்த்திகை தீபம்: பிறகு வீட்டில் விட்டு விடுவதாக சொல்ல ஜானகி என் மருமகள் மைதிலி இருப்பதாக சொல்லி ஃபோன் செய்ய மைதிலி எனக்கு இடம் தெரியாது என கார்த்திக்கு தகவல் கொடுக்கிறாள். கார்த்திக் ஹாஸ்பிடல் வர சந்திரகலா இதை பார்க்கிறாள். கார்த்திக், மகேஷை பார்க்க வந்திருக்கலாம் என பின் தொடர அவன், ஜானகியை சந்தித்து பேசுகிறான். இருவரும் அத்தை, மாப்பிள்ளை என பேச சந்திரகலா சந்தேகம் அடைகிறாள். பிறகு கார்த்திக் ஜானகியை வீட்டுக்கு அழைத்து செல்வதை, ஆதாரத்திற்காக சந்திரகலா போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறார். பின்கார்த்திக் ஜானகியை வீட்டில் விடுகிறார். அப்போது, ரேவதி நல்ல பொண்ணு என பேசுகின்றனர். கார்த்திக் கிளம்பியதும் சந்திரகலா உள்ளே வந்து நலம் விசாரிக்கிறாள்.
ரேவதியின் காதல்: அடுத்து தீபா போட்டோவை பார்த்து யார் என்று கேட்க என்னுடைய மகள் இறந்து விட்டாள். மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதாக சொல்கிறாள். மறுபக்கம் ரேவதி கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்கிறாள். மேலும், கார்த்திகிற்கு கிஃப் வாங்கி வைக்கிறாள். மேலும், தன் மனதில் இருக்கும் காதலை ஒரு கடிதத்தில் எழுதி அதை, கார்த்திக் கண்ணில் படும் படி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











