ஏமாற்றி திருமணம் செய்த கார்த்திக்.. வேதனையில் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதி கார்த்திக்காக ஒரு லவ் லெட்டரை எழுதி அதை கார்த்தியின் சட்டை பாக்கெட்டில் வைத்து விடுகிறாள். மேலும், ரேவதி, கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்து சர்ப்ரைஸ் கொடுக்கிறாள். எல்லாரும் இதை பார்த்து சந்தோசப்பட சந்திரகலா மட்டும் விருப்பமின்று நிற்கிறாள். பிறகு கார்த்தி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறான். ரேவதி சந்தோஷமடைகிறாள். அவன் பேக்கெட்டில் இருக்கும் லவ் லெட்டரை படிப்பானா? இல்லையா? என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சிவனாண்டி சந்திரகலாவுக்கு ஃபோன் செய்து கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. மனைவியின் பெயர் தீபா. அவன் ராஜசேதுபதியின் பேரன் என்கிற உண்மையை மட்டும் மறைக்கவில்லை, ஏற்கனவே கல்யாணம் ஆனதையும் மறைத்து ரேவதியை திருமணம் செய்து இருக்கிறான் என்ற உண்மையையே உடைக்கிறான். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட சந்திரகலா, இந்த உண்மையை நாம துர்காவின் நிச்சயத்தில் எல்லாரும் இருக்கும் போது சொன்னால் தான் சாமுண்டீஸ்வரியின் மொத்தமானமும் போகும் என்று பிளான் போடுகிறாள்.

கவலைப்படாதே: மறுபக்கம், துர்காவின் நிச்சயத்திற்கான வேலைகள் நடக்கிறது. துர்கா, இன்னும் கொஞ்ச நேரத்தில் நமக்கு நிச்சயம் நடக்க போகிறது. ஆனால், மாமா எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொல்லி இருக்கிறார். என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் இருக்கிறாள். அப்போது, ரேவதி அங்கு வந்து, என்ன துர்கா, என்ன நடக்கப்போகுதோ என்கிற பயத்தில் இருக்கியா.. நீ எதை பற்றியும் கவலைப்படாதே எல்லாத்தையும் மாமா பார்த்துக்கொள்வார், அவர் சொன்னா சொன்னதை செய்யக்கூடியவர் என்று சொல்கிறாள்.
சந்திரகலாவின் திட்டம்: அந்த நேரம் ரேவதிக்கு, போட்டோ ஸ்டூடியோவில் இருந்து போன் வருகிறது. அதில், ரேவதி மேடம், உங்கள் கணவரின் பிறந்த நாளில் எடுத்த அனைத்து போட்டோவையும் அனுப்பி வைத்து இருக்கிறேன். அதில், எந்த போட்டோ வேண்டும் என்று செலக்ட் செய்து அனுப்புங்கள் என்று சொல்கிறார். சார், நானும் என் கணவர் இருக்கும் எல்லா போட்டோவையும் ஆல்பமாக போட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைக்கும் ரேவதி, போனில் இருக்கும் கார்த்திக்கின் போட்டோவை பார்த்து ரசிக்கிறாள். இதை மாடியில் இருக்கும் பார்க்கும் சந்திரகலா, என்னடி ரேவதி, உன் புருஷன் போட்டோவை பார்த்து ரசிக்கிறியா... இன்னும் கொஞ்ச நேரத்தில், கார்த்திக்கின் முதல் பொண்டாட்டி போட்டோ வரப்போகுது. அதைப்பார்த்து, அய்யோனு வயித்துல அடிச்சிக்கிட்டு அழுவ, நீ எப்படி கதறப்போற என்பதை நான் பார்க்கிறேன் என்று மனதிற்குள் பேசிக்கொள்கிறாள்.
மாறிய கடிதம்: மறுபக்கம், ரேவதி, மயில்வாகனத்திடம் நிச்சயத்திற்கு வாங்க வேண்டிய லிஸ்ட் ஒன்றை கொடுத்து சில பொருட்களை வாங்கி வர சொல்கிறாள். மயில் வாகனம், ரேவதி கொடுத்த லிஸ்டை எடுக்க கார்த்திக் அதை வாங்க முயற்சி செய்ய இருவருக்கும் இடையே நடந்த குழப்பங்களால் லிஸ்ட் இடம் மாறுகிறது. கார்த்திக் அந்த லெட்டரை எடுத்து படிக்க அது மளிகை சமானாக லிஸ்ட்டாக இருக்கிறது. அடுத்து மயில்வாகனம் கடைக்கு வந்து லெட்டரை கொடுக்க கடைக்காரர் அதை படிக்க பிறகு கோபமடைகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











