கார்த்தியிடம் சிக்கிய போலி சாமியார்.. பயத்தில் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபாவிற்கு மீண்டும் கல்யாணம் நடந்தா அபிராமி உயிருக்கு ஆபத்து என்று தர்மலிங்கம் பேசுவதை அபிராமி கேட்டுவிடுகிறாள். இதையடுத்து அபிராமி, கார்த்திக் கிட்ட எதுக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறீங்க? பயப்படும் மாதிரி எதுவும் நடக்காது, நல்லது தானே செய்ய போறோம் என்கிறார். இதையடுத்து, கார்த்திக்கிடம் சென்று இந்த கல்யாணத்தில் நிறைய தடைகள் வரும்னு எனக்கு தோணுது. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீ நடத்தி கொடுப்பேன் என்று சத்தியம் பண்ணு என்று சத்தியம் செய்ய சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபா பரிகாரம் செய்யும் போது, ஒரு பெண் சாமியார் தான் என்னை காட்டு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகு தான் எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்க தான் என்று சொல்கிறாள். இதையடுத்து, அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து அந்த சாமியாரை சந்தித்து கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுக்க சொல்ல முதலில் யோசித்த, அந்த பெண் சாமியார், பிறகு ஒரு தேதியை குறித்து கொடுக்கிறார். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் தர்மலிங்கத்திடம் உங்க ஜோசியர் அப்படி சொன்னாரு, எங்க ஜோசியர் கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுத்து இருக்காரு என்று அபிராமி சொல்கிறாள்.

ரம்யாவை விசாரிக்கும் கார்த்திக்: மறுபக்கம், பையில் இருந்த போலி சாமியாரின் விக் மற்றும் தாடியை எடுத்துக்கொண்டு இளையராஜா வீட்டுக்கு வரும் அந்த பை குறித்து விசாரிக்க, அது என்னுடையது இல்ல, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அந்த ஆளுடையது என்று சொல்ல, உடனே கார்த்திக் ரம்யாவிற்கு போன் செய்து, அந்த நபரின் வீட்டு முகவரியை கேட்க, அவன் என்னுடைய கம்பெனியில் வேலை செய்த பழைய ஆள், அவன் அட்ரஸ் எனக்கு தெரியாது என்று சொல்கிறாள்.
வசமாக சிக்கிய போலி சாமியார்: சரி நான் ஸ்டேஷனில் கேட்டுகிறேன் என்று சொல்லி கார்த்திக் போனை வைக்க பதறிப்போன ரம்யா, இப்போ மட்டும் நம்ம அட்ரசை தரவில்லனா கார்த்திற்கிற்கு நம்ம மேல சந்தேகம் வந்துவிடும் என்று யோசித்து விட்டு, போலிசாமியாராக நடித்த சேகர் பல வருஷத்திற்கு முன்னாடி கொடுத்த வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு, இன்னுமா அந்த வீட்டில் அவன் இருக்க போகிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, சேகருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அய்யோ மேடம் நான் அந்த வீட்டில் தான் இருக்கேன் என்று குண்டை தூக்கி போடுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











