அபிராமிக்கு வரம் கொடுத்த அம்மன்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், போலி சாமியாரின் விக் மற்றும் தாடியை எடுத்துக்கொண்டு இளையராஜா வீட்டுக்கு வரும், கார்த்திக் அந்த பை குறித்து விசாரிக்க, அது என்னுடையது இல்ல, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அந்த ஆளுடையது என்று சொல்ல, உடனே கார்த்திக் ரம்யாவிற்கு போன் செய்து, அந்த நபரின் வீட்டு முகவரியை கேட்க, இப்போ மட்டும் நம்ம அட்ரசை தரலைனா கார்த்திக்கிற்கு நம்ம மேல சந்தேகம் வந்துவிடும் என்று யோசித்து விட்டு, போலி சாமியாராக நடித்த சேகர் பல வருஷத்திற்கு முன்னாடி கொடுத்த வீட்டு முகவரியை கொடுத்துவிடுகிறாள்.

இதையடுத்து, சேகருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அய்யோ மேடம் நான் அந்த வீட்டில் தான் இருக்கேன் என்று குண்டை தூக்கி போடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடு, தீபா ஒரு பெண் சாமியார் தான் என்னை காட்டு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகு தான் எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்க தான் என்று சொல்கிறாள். இதையடுத்து திருமணத்திற்கான தேதியை குறித்துக்கொண்டு வந்த தர்மலிங்கத்திடம் பேசுகிறார்.

வசமாக சிக்கிய ரம்யா: அதன் பிறகு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் வெங்கையா வீட்டிற்கு வந்து நான் தான் ரம்யா நம்பீசன் எனக்கு இன்னும் ரெண்டு நாள் உங்க நிலம் வேண்டும், சாமியார் வருவதாக சொல்ல இவன் நீங்க யார்? நீங்க ரம்யா நம்பீசன் இல்லையே என்று சொல்ல கார்த்திக் என்ட்ரி கொடுத்து நடந்ததை சொல்ல சொல்லி கேட்கின்றான்.இதை தொடர்ந்து வெங்கையா ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறார். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வருகிறது.

கடுப்பான ரம்யா: ரம்யா போனை எடுத்ததும் கார்த்திக் நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும் போனை கட் செய்து சிம்மை கழட்டி உடைத்து எறிகிறாள். அடுத்து, காலில் அடிபட்டு ரம்யா நொண்டியபடி கார்த்திக் வீட்டிற்கு வர மைதிலியும் மீனாட்சியும் சேர்ந்து தீபாவுக்கு கல்யாணம் செய்ய நாள் குறித்த விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X