செம ரொமான்ஸ் .. கார்த்திக்கை வெட்கப்பட வைத்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் கையில் சிக்கி வெங்கையா ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறார். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வருகிறது. ரம்யா போனை எடுத்ததும் கார்த்திக் நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும் போனை கட் செய்து சிம்மை கழட்டி உடைத்து எறிகிறாள்.
மறுபக்கம் தீபாவின் கல்யாணத்திற்கு அம்மன் உத்தரவு கொடுத்துவிட கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டு இருக்கிறது. காலில் அடிபட்டு ரம்யா நொண்டியபடி கார்த்திக் வீட்டிற்கு வர, மைதிலியும் மீனாட்சியும் சேர்ந்து தீபாவுக்கு கல்யாணம் செய்ய நாள் குறித்த விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரியாவை பெயிலில் ஒருவர் வெளியே எடுத்ததாக சொல்லி லாயர் ஒருவர் வெளியே அழைத்து வர அங்கு ரம்யா நிற்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைவோம் என்று சொல்லி இருவரும் கூட்டு சேருகின்றனர்.
ரியாவின் திட்டம்: இதையடுத்து, ரியா, நம்ம கூட இருந்த ஐஸ்வர்யா கூட நம்மல வெளியில எடுக்கல, ஆனால் ரம்யா வெளியில் எடுத்து இருக்கா, இனிமேல் அவளுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரியா, ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து, என்னம்மா கண்ணு எப்படி இருக்க என்று கேட்க ஐஸ்வர்யா யார் பேசுறது என்ற கேட்க, ஓ வாய்ஸ் கூட மறந்து போச்சா, தங்கம் தரேன் வைரம் தரேன் என்று சொன்னாத்தான் நினைப்பு இருக்குமா என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, என்ன ரியா வெளியில வந்துட்டியா என்று கேட்கிறாள்.
மூன்று பேரும் கூட்டு: ஆமாம் நான் வெளியில் வந்துட்டேன், என்னை வெளியில் எடுத்தது ரம்யா தான் , அவளுக்கு கார்த்திக்கோட மனைவியாக ஆகணும், எனக்கு ஆனந்தோட மனைவியா ஆகணும் இதற்கு நீ தான் உதவி பண்ண வேண்டும். அதற்கு பரிகாரமாக உனக்கு என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன் என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் ஓகே சொல்லிவிட மூன்று பேரும் கூட்டு சேர்கின்றனர்.
கார்த்திக், தீபா ரொமான்ஸ்: மறுபக்கம் வீட்டில் கார்த்திக் ரூமுக்கு வர தீபா, மத்த ரெண்டு பேரை போல் நான் இந்த வீட்டிற்கு முறைப்படி மருமகளா வரல, நமக்கே தெரியாமல் தான் நம்ம கல்யாணம் நடந்தது. உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்க கார்த்திக் அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொல்கிறான். நீங்க யாரையாவது காதலிச்சி இருக்கீங்களா என்று கேட்கிறாள். என்னை அன்பா பார்த்துக்கொள்ள ஒரு ஆள் இருக்கும் போது நான் ஏன் காதலிக்க வேண்டும் என்று தீபாவை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறான் கார்த்திக்.
சவால் விடும் தீபா: ஓ அப்படியா யாரை காதலிச்சீங்க என்று கேட்க, அது எதுக்கு இப்போ, நீங்க யாரையாவது காதலிச்சீங்களா என்று கார்த்திக் கேட்க, ஆமாம் உங்களைத்தான் என்று சொல்கிறாள். அதுதான் எனக்கு தெரியுமே என்று அவளை வம்பு இழுக்கும் வகையில் பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறான். உடனே தீபா கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











