நான் இரண்டாம் தாரமா? ஏமாற்றி கார்த்தியை நினைத்து கதறி அழும் ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி, கார்த்திக், தீபாவுடன் திருமணம் நடந்தது குறித்து சந்திரகலா போட்டோவை காட்டி ஆதாரத்துடன் காட்டுகிறாள். அதன் பின், இப்போவது தெரியுதா இந்த டிரைவர் ராஜா மோசமானவன், இந்த வீட்டு சொத்துக்காக தனக்கு கல்யாணம் ஆனதை மறைச்சி, ரேவதி கழுத்தில் தாலிகட்டி இருக்கிறான் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கார்த்திக், போதும் நிறுத்துங்க நான் யாரையும் ஏமாற்றி திருமணம் செய்யவில்லை. நான் ரேவதி கழுத்தில் தாலி கட்டும் போதே, எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ரேவதி, எப்போது சொன்னார் என்று யோசிக்கும் போது தான், திருமணத்தில் தான் விருப்பமே இல்லாமல் இருந்தது ரேவதிக்கு நினைக்கு வருகிறது.

அதன் பிறகு, சாமுண்டீஸ்வரி, போதும் நிறுத்து சந்திரா, இந்த விஷயத்தை மாப்பிள்ளை எனக்கு முன்பே சொல்லிவிட்டார். எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால், ரேவதி, கார்த்திக்கிற்கு திருமணமானதை நினைத்து வருத்தப்படுகிறான். யாருமே இதைபற்றி சொல்லவில்லையே என வேதனை அடைகிறாள். மறுபக்கம், கார்த்திக்கை சந்திக்கும் சாமுண்டீஸ்வரிக்கும், மாப்பிள்ளை காலையில் சந்திரத்தில் நடந்ததை நினைத்து ஏன் வருத்தப்படுறீங்க, நீங்க உங்க முதல் மனைவி இறந்த பிறகு தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க. அதனால் எந்த தவறும் இல்லை. அப்படியே வாழ்த்து முழுவதும் தனியாக இருந்திட முடியாது. அதனால நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லை என்று சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: விடிந்ததும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு செல்லும் ரேவதி, பாட்டி நீங்க கூட, கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்கள். ஏன் அப்படி செய்தீர்கள் பாட்டி என கண்கலங்கி கதறி அழுகிறார். ரேவதியை சமாதானம் படுத்தும் பரமேஸ்வரி பாட்டி, உன்னை ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. எப்படியாவது இந்த குடும்பம் சேர வேண்டும் என்பதற்காக கார்த்தி படாத பாடு பட்டார். கார்த்தியின் முதல் மனைவி தீபா இறந்தபின், எத்தனையோ முறை நானும் அபிராமியும் திருமணம் செய்து கொள் என்று சொல்லியும் திருமணமே வேண்டாம் என்று இருந்தான். ஆனால், சந்தர்ப்பவசத்தால் கடவுளாக உங்கள் இருவரையும் சேர்த்து வைத்ததால் இந்த உண்மையை மறைத்து விட்டேன். உண்மையில் கார்த்திக்கும் தீபாவும் நல்ல தம்பதிகளாக அவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். தீபாவின் மறைவை கார்த்தியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நீ வாழ்க்கையில் வந்த பிறகு தான் கார்த்திக்கின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பிக்கை வந்தது என்று சொல்ல ரேவதியின் மனம் மாறுகிறது.

அடுத்த பிளான்: மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டி இருவரும் சாமுண்டீஸ்வரியை பழி வாங்களாம் என்று பார்த்தால், எப்படியோ அவள் தப்பித்துக்கொண்டே இருக்கிறாள். நாம தான், ஒவ்வொரு திட்டத்திலும் தோற்றுப்போகிறோம். ஆனால், அவள் புதுசு புதுசா கம்பெனி தொடங்கிக் கொண்டே இருக்கிறாள். அவளை இப்படியே விடக்கூடாது, ஏதாவது பண்ணனும் என்று திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில், சந்திரகலா சாமுண்டீஸ்வரியை கொன்று விடலாம் என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X