உனக்கு பிடிச்சது, எனக்கும் பிடிக்கும்.. கார்த்திக் தீபாவின் லவ் ட்ராக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா முதல் முறை நடந்த திருமணம் யாருக்கும் தெரியாமல், சீக்கிரத்தில் நடந்து முடிந்துவிட்டதால், இரண்டாவதாக கார்த்திக்கை திருமணம் செய்வதாவது பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.
மேலும், தீபா, கார்த்திக்கிடம் உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்க கார்த்திக் அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொல்லியதால், கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவின் ஆசைக்காக ஆரம்பத்தில் இருந்து எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்யப்படுகிறது. இதையடுத்து, தீபாவை பெண் பார்க்க கார்த்திக் குடும்பத்தினர் அவளது வீட்டிற்கு வருகின்றனர். தீபா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அபிராமி பொண்ணு லட்சணமா இருக்கா என்று சொல்கிறாள். அதன் பிறகு பொண்ணு நல்லா பாடுவானு சொன்னாங்க என்று மீனாட்சி கேட்க, மைதிலி ஆமா கர்நாடிக் மியூசிக் நல்லா பாடுவா நிறைய கச்சேரில பாடி பரிசு எல்லாம் வாங்கியிருக்கா என்று சொல்கிறாள். இதையடுத்து, ஒரு பாட்டு பாட சொல்லுங்க என்று சொன்னதும் தீபா பாட்டு பாடுகிறாள்.
பெண் பார்க்கும் படலம்: பிறகு பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று அபிராமி குடும்பத்தினர் சொல்ல, தீபா ரம்யாவை இடித்து நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசணும்டி என்று சொல்ல, ரம்யா பொண்ணுக்கு மாப்பிள்ளை கிட்ட தனியாக பேசணுமாம் என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக், தீபா தனியாக பேச போகின்றனர். அப்போது, கார்த்திக் நான் எம்பிஏ படிச்சிருக்கேன் என்று சொன்னதும் தீபா நான் 12வது பெயிலு ஆனால 10 பாஸ் என்று சொல்ல கார்த்திக் சிரிக்கிறான்.
செம ரொமான்ஸ்: பின் உங்களுக்கு பிடிச்ச கலர், பிடிச்ச சாப்பாடு என்ன என்று கேட்க, எனக்கு பிளாக் கலர் பிடிக்கும், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்று சொல்ல,அட எனக்கும் பிளாக் பிடிக்கும், மட்டன் பிரியாணி பிடிக்கும் என்று வெட்கத்தில் வழிகிறாள் தீபா. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று தீபா கேட்க, என் அம்மா கிட்ட சொல்றேன் என்று கீழே இறங்கி வருகிறான். அதன் பிறகு அபிராமி, தீபாவிடம் மாப்பிள்ளை பிடிச்சு இருக்கா என்று கேட்க அவள் பிடிச்சு இருக்கு என்கிறாள். கார்த்திக்கும் எனக்கும் பிடிச்சிருக்கு என்று சொல்கிறான். பிறகு தட்டு மாற்றி நிச்சயம் முடித்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











