சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் சதி.. கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு செல்லும் ரேவதி, பாட்டி நீங்க கூட, கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்கள். ஏன் அப்படி செய்தீர்கள் பாட்டி என கண்கலங்கி கதறி அழுகிறார். ரேவதியை சமாதானம் படுத்தும் பரமேஸ்வரி பாட்டி, உன்னை ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. எப்படியாவது இந்த குடும்பம் சேர வேண்டும் என்பதற்காக கார்த்தி படாத பாடு பட்டார். கார்த்தியின் முதல் மனைவி தீபா இறந்தபின், திருமணமே வேண்டாம் என்று இருந்தான். ஆனால், சந்தர்ப்பவசத்தால் கடவுள் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்து இருக்கிறார். நீ நல்லபடியாக வாழ்க்கை தொடங்கு என்கிறாள்.

மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டி இருவரும் சாமுண்டீஸ்வரியை பழி வாங்களாம் என்று பார்த்தால், எப்படியோ அவள் தப்பித்துக்கொண்டே இருக்கிறாள். நாம தான், ஒவ்வொரு திட்டத்திலும் தோற்றுப்போகிறோம். ஆனால், அவள் புதுசு புதுசா கம்பெனி தொடங்கிக் கொண்டே இருக்கிறாள். அவளை இப்படியே விடக்கூடாது, ஏதாவது பண்ணனும் என்று திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில், சந்திரகலா சாமுண்டீஸ்வரியை கொன்று விடலாம் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் அங்கு வந்து என்னாச்சு என்று விசாரிக்கின்றனர். இதற்கிடையில் தொழிலாளர் ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டதாக தகவல் வர கார்த்திக்கும் மயில்வாகனமும் கிளம்பி செல்கின்றனர். அதற்குள், சந்திரகலா இங்கே சாமுண்டீஸ்வரியை கொல்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள். அடுத்து கார்த்திக்கு, எதார்ச்சையாக இது நடக்கவில்லை, யாரோ வேண்டுமென்ற கரண்ட் ஷாக் அடிப்பது போல் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறான்.

ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்: உடனே கார்த்திக் ரேவதி, சாமுண்டீஸ்வரி, துர்கா, ரோஹினி என அனைவருக்கும் ஃபோன் போட்டு உஷாராக இருக்க சொல்லி எச்சரிக்க முயற்சி செய்ய போன் ரீச் ஆகாமல் போய் விடுகிறது. பிறகு இங்கே ரேவதி ஸ்விட் போட போகும் சமயத்தில் கார்த்திக் அங்கு வந்து தடுத்து நிறுத்துகிறான். இதன் மூலம் ரேவதியின் உயிரை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? சாமுண்டீஸ்வரி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X