ஆபத்தான கட்டத்தில் அபிராமி..நடுகாட்டில் நடக்கும் பரிகாரம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, ரம்யாவை சந்தித்து, அத்தையின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு பிழைப்பது ரொம்ப கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அவங்க பிழைக்க வேண்டும், அவங்க நல்லபடியாக குணமாகி வந்து எனக்கு தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக நான் அந்த பரிகாரத்தை செய்தே ஆக வேண்டும் என்று கதறி அழுகிறாள்.

துணிந்து ஒரு முடிவு எடுத்த தீபா, போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு , என் முழு மனதுடன் தான் செய்கிறேன். இந்த பரிகாரத்தில் எனக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு நான் மட்டுமே தான் பொறுப்பு என்று பேசி அந்த வீடியோவை ரம்யாவிற்கு அனுப்புகிறாள். ரம்யா இனிமேல் நீ பயப்படவேண்டாம், எனக்கு எதாவது ஆச்சுனா இந்த வீடியோவை என் குடும்பத்திடமும், என் கணவரிடமும் காட்டு என்று சொல்ல, ரம்யா மனதிற்குள் சந்தோஷப்பட்டு துள்ளி குதிக்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவை தீர்த்து கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்ய நடு காட்டுக்குள் ஓடும் ஆறு ஒன்றை காட்டி, மேடம் இந்த இடத்தில் தான் பரிகாரம் செய்யப்போகிறோம் என்கிறார். இடத்தைப்பார்த்து குஷியான ரம்யா, சூப்பர் தீபாவை தீர்த்துக்கட்ட சரியான இடம் இதுதான் என்கிறாள். இதையடுத்து, தீபாவிற்கு போன் செய்யும் ரம்யா, நான் சாமியாரிடம் பேசி விட்டேன். அவர் பரிகாரத்திற்கு ரெடியாகி இருக்கிறார்.

ரம்யா போட்ட பிளான்: நீ எங்கே இருக்க என்று கேட்க, நான் இன்னும் கோவிலில் தான் இருக்கேன், வீட்டுக்கு போகவில்லை என்கிறாள் தீபா. உடனே நல்லதா போச்சு, நீ கோவிலிலேயே இரு நான் வரேன். வந்ததும் இரண்டு பேரும் சேர்ந்து சாமியாரை பார்க்க போகலாம். அப்புறம் வீட்டில் இருந்து யார் போன் செய்தாலும் எடுக்காதே, அவர்கள் வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டால், பரிகாரம் செய்ய முடியாமல் போய்விடும், அதனால் நீ போனை ஆப் செய்துவிடு என்று சொல்கிறாள். ரம்யா சொன்னதை கேட்டு தீபாவும் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாள்.

ஆற்றில் இறங்கிய தீபா: இதையடுத்து, தீபா, போலி சாமியார் சொன்னதையும் ரம்யாவின் நாடகத்தையும் உண்மை என நம்பி பரிகாரம் செய்ய தயாராகிறாள். இதையடுத்து பீப்பாய்க்குள் தீபா இறங்க, கரையில் இருக்கும் ரம்யா பீப்பாயில் கட்டியிருக்கும் கயிற்றை பிடித்துக்கொண்டு நிற்கிறாள். அப்போது தீபா, ரம்யா உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்லிவிட்டு கண்ணை மூடி தியானத்திற்கு தயாராகிறாள்.

தீபாவை தேடும் கார்த்திக்: மறுபக்கம் தீபாவிற்கு கார்த்திக் போன் செய்ய போன் சுட்விச் ஆப் என்று வந்ததால், மீனாட்சியிடம் தீபா எங்கே என்று கேட்கிறான். தெரியல கார்த்தி, நேத்தில் இருந்து பரிகாரம் பரிகாரமுனு புலம்பிக்கொண்டே இருந்தா, அத்தைக்காக ஏதோ செய்ற, ஆன என்ன செய்ற என்று தான் தெரியவில்லை என்று சொல்ல, கார்த்திக்கிற்கு லைட்டா சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X