நடு இரவில் ரம்யாவிடம் உதவி கேட்ட தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் ஆசைக்காக ஆரம்பத்தில் இருந்து எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்யப்படுகிறது. இதையடுத்து, பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்கு பின், உங்களுக்கு பிடிச்ச கலர், பிடிச்ச சாப்பாடு என்ன என்று கேட்க, எனக்கு பிளாக் கலர் பிடிக்கும், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்று சொல்ல, அட எனக்கும் பிளாக் பிடிக்கும், மட்டன் பிரியாணி பிடிக்கும் என்று வெட்கத்தில் வழிகிறாள் தீபா.
எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று தீபா கேட்க, என் அம்மா கிட்ட சொல்றேன் என்று கீழே இறங்கி வரும் கார்த்திக் பெண்ணை எனக்கு பிடித்து இருக்கு என்று சொல்ல, நிச்சய தார்த்தம் நடக்கிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபா வீட்டில் நடந்த ரொமான்சை பார்த்து கடுப்பான ரம்யா நேராக ரியா இருக்கும் இடத்திற்கு வந்து நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை சொல்லி கோபப்படுகிறாள். என்னால இதையெல்லாம் பார்க்கவே முடியல என்று புலம்பும் ரம்யா, எனக்கு எப்படியாவது கார்த்திக்கை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். அதை கேட்ட ரியா, அவ்வளவு தானே நீ கவலையே படாத தீபாவை எப்படியாவது போட்டுக் தள்ளிவிட்டால், கார்த்திக் உனக்குத்தான் என்று ஐடியா கொடுக்கிறாள்.
கார்த்திக் தீபாவை பிரித்த அபிராமி: மறுபக்கம் அபிராமி வீட்டில் இன்னும் பத்து நாளில் கார்த்திக் தீபாவுக்கு கல்யாணம் என்பதால் அதுவரை அவர்கள் தனித்தனியாக தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் கார்த்திக்குடன் ஆனந்தையும் மீனாட்சி உடன் தீபாவையும் படுத்துக் கொள்ள சொல்கின்றனர். அதன் பிறகு மீனாட்சி கார்த்திக்கிடம் பஞ்சை கொண்டு வந்து கொடுத்து, இத வெச்சிக்கோங்க என்று சொல்ல, கார்த்திக் இது எதுக்கு அண்ணி என்று கேட்க வச்சுக்கோங்க உதவும் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். பிறகு தீபாவுக்கு பக்கத்தில் தலையணைகளை அடுக்கி வைக்க தீபா எதுக்கு இதெல்லாம் என்று கேட்க மீனாட்சி போக போக புரியும் என்று சொல்லிவிட்டு படுக்கிறாள்.
குல்பி கேட்கும் கார்த்திக்: பின் கார்த்திக் பஞ்சை தூக்கி போட்டு விட்டு ரூமிற்கு செல்ல, நடு இரவில் ஆனந்த் குறட்டை சத்தம் தாங்காமல் கார்த்திக் தூக்கத்திலிருந்து எழுந்து அண்ணி பஞ்சை கொடுத்தது இதற்குத்தானா என்று புலம்பியபடி பஞ்சை தேடுகிறான். அதேபோல் இங்கே மீனாட்சி, தீபாவின் மீது காலை தூக்கி போட அவள் தூக்கம் கலைந்து தூங்க முடியாமல் தவிக்கிறாள். இதனால் தீபா வெளியே வர கார்த்திக் நின்று கொண்டிருக்க தீபாவை பார்த்ததும் தூங்கலையா என்று கேட்க உங்களை பார்க்கணும் போல இருந்தது அதனாலதான் வெளியில வந்தேன் என்று சொல்கிறாள்.
ரம்யா செய்த உதவி: பிறகு, தீபா உங்களுக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க கார்த்திக் எனக்கு குல்பி வேண்டும் என்று சொல்ல தீபா உடனே கொண்டு வந்து தரேன் என்று வேக வேகமாக சென்று ரம்யாவிற்கு போன் போட்டு குல்பி வாங்கிட்டு வந்து கொடுக்கும்படி உதவி கேட்கிறாள். ரம்யாவும் அதைக் கொண்டு வந்து கொடுக்க தீபா நானே உங்களுக்காக வெளில போய் வாங்கிட்டு வந்தேன் என்று பொய் சொல்லி கார்த்திக்கிடம் கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் கார்த்திக் நீங்க சொன்னத நான் நம்பிட்டேன். ரம்யா கார் வந்து போனதை நானும் கவனிச்சேன் என்று சொல்கிறான்.
மீண்டும் பணம் கேட்கும் சேகர்: அடுத்த நாள் காலையில் ரம்யா வீட்டு காலிங் பெல் அடிக்க அவள் கதவைத் திறக்க சேகர் அங்கு நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். உன்னை தான் வெளியூர் போக சொல்லி பணம் கொடுத்தனே போகலையா என்று கேட்க அவன் அந்த பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் கோட்டை விட்டுட்டேன் இன்னும் கொஞ்சம் பணம் தாங்க என்று கேட்கிறான். ரம்யா வேறு வழியின்றி கொஞ்சம் பணத்தை கொடுத்து ஒழுங்கு மரியாதையா வெளியூர் ஓடிப் போயிடு என்று திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











