நேருக்கு நேராக சவால் விடும் சாமுண்டீஸ்வரி.. முத்துவேல் - வெல்லப்போவது யார்? கார்த்திகை தீபம் !

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரி காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் அங்கு வந்து என்னாச்சு என்று விசாரிக்கின்றனர். இதற்கிடையில் தொழிலாளர் ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டதாக தகவல் வர கார்த்திக்கும் மயில்வாகனமும் கிளம்பி அங்கு செல்கின்றனர். அதற்குள், சந்திரகலா இங்கே சாமுண்டீஸ்வரியை கொல்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள். அடுத்து கார்த்திக்கு, எதார்ச்சையாக இது நடக்கவில்லை, யாரோ வேண்டுமென்ற கரண்ட் ஷாக் அடிப்பது போல் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறான்.

இதனால், தொழிற்சாலையில் ஏதோ நடக்கக்போகிறது என்பது தெரிய வருகிறது. உடனே கார்த்திக், தொழிற்சாலையில் இருக்கும் அனைவருக்கும் ஃபோன் போட்டு உஷாராக இருக்க சொல்லி எச்சரிக்க முயற்சி செய்ய போன் ரீச் ஆகாமல் போய் விடுகிறது. பிறகு இங்கே ரேவதி ஸ்விட் போட போகும் சமயத்தில் கார்த்திக் அங்கு வந்து தடுத்து நிறுத்துகிறான். இதைப்பார்த்து பதறிப்போன சாமுண்டீஸ்வரி என்ன மாப்பிள்ளை என்று கேட்க, அந்த ஸ்விட்டை தொட்டதும் ஷாக் அடிக்கும் வகையில் யாரோ செய்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதன் மூலம் ரேவதியின் உயிரை காப்பாற்றுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனாண்டி என இருவரும் கோவிலில் சந்தித்துக் கொள்ள அப்போது முத்துவேல் கண்டிப்பா இந்த தேர்தலில் நீ ஜெயிக்க போறது இல்ல ஒருவேளை நீ தோத்துப் போயிட்டா என் வீட்டுக்கு, உன் நான்கு பொண்ணுகளோட வந்து முறை வாசல் செய்யணும் என்று சவால் விடுகிறான். சாமுண்டீஸ்வரி ஒரு வேலை நீ தோத்துட்டா என்று பேச்சை ஆரம்பிக்க கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வந்து இந்த வேலை எல்லாம் செய்யணும் என்று சொல்கிறான்.

அவமானப்பட்ட சிவனாண்டி: அதன் பிறகு சாமுண்டீஸ்வரி முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபட சிவனாண்டி நான் ஜெயித்தால் உங்க எல்லாருக்கும் தினமும் கோட்டர் தருவேன் என்று சொல்லி ஓட்டு சேகரிக்க மயில்வாகனம் இதை வீடியோ எடுக்கிறான். பிறகு சாமுண்டீஸ்வரி இந்த வீடியோவை காட்டி இங்க பாருங்க உங்க புருஷனை குடிக்க வைக்கிறான் என்று சொல்லி ஓட்டுக்களை சாதகமாக்குகிறாள். பிறகு ஒரு திட்டம் போட்டு சாமுண்டீஸ்வரி போனில் அந்த ஃபங்ஷனுக்கு நான் வரேன் என்று சொல்ல சந்திரகலா சிவனாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் சாமுண்டீஸ்வரிக்கு முன்பாக அங்கு வருகிறான்.

அது கல்யாண வீடு என்று நினைத்துக் கொண்டு உங்களோடு சந்தோஷத்தில் நான் பங்கெடுத்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் என்று டயலாக் பேச கடைசியில் சாவு வீட்ல என்னடா பேசிட்டு இருக்க என்று அவனை அடித்து ஓட விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? சாமுண்டீஸ்வரி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X