தீபாவை கடத்திய ரியா..நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவை தீர்த்து கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்ய நடு காட்டுக்குள் ஓடும் ஆறு ஒன்றை காட்டி, மேடம் இந்த இடத்தில் தான் பரிகாரம் செய்யப்போகிறோம் என்கிறார். இடத்தைப்பார்த்து குஷியான ரம்யா, சூப்பர் தீபாவை தீர்த்துக்கட்ட சரியான இடம் இதுதான் என முடிவு செய்கிறாள்.

இயைடுத்து, தீபாவிற்கு போன் செய்யும் ரம்யா, சாமியார் பரிகாரத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். அவரை பார்க்க போகலாம். வீட்டில் இருந்து யார் போன் செய்தாலும் எடுக்காதே, அவர்கள் வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டால், பரிகாரம் செய்ய முடியாமல் போய்விடும், அதனால் நீ போனை ஆப் செய்துவிடு என்று சொல்கிறாள். ரம்யா சொன்னதை கேட்டு தீபாவும் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரியா என்கிட்ட ஒரு டைமண்ட் இருக்கு, மார்க்கெட்டில் எப்படியும் பல கோடிக்கு போகும் என்று சொல்ல ராஜேஸ்வரி வாயை பிளக்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் வெளியே செல்லும் போது குறி சொல்லும் பெண் ஒருவரை பார்க்கின்றனர். அப்போது அந்த பெண் உங்க மனசுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு என்று சொன்னதும் இவர்கள் குறி கேட்க வந்திருப்பதாக சொல்கின்றனர். முதலில் ராஜேஸ்வரி இவ என் பொண்ணு, இவளோட மாமியார் ஹாஸ்பிடலில் இருப்பாங்க, எப்போ சாவாங்க என்று கேட்க அந்த பெண் அடுத்த அமாவாசைக்கு செத்து போய்டுவாங்க என்று சொல்கிறாள்.

சுடுகாட்டில் பூஜை: அடுத்து ஐஸ்வர்யா வீட்டு கொத்து சாவி எப்போ என்னுடைய கைக்கு கிடைக்கும் என்று கேட்க அது கண்டிப்பா உ ன் கைக்கு கிடைக்கும், ஆனால் அதுக்கு நீ கொஞ்சம் கஷ்டப்படணும். சுடுகாட்டில் ஒரு பூஜை செய்யணும், அப்படி செய்தா உன் மாமியார் செத்து போய்டுவாங்க, அதன் பிறகு ஆயுத பூஜை ஒன்னு செய்யணும் அதன் பிறகு கொத்து சாவி உன் கைக்கு வரும் என்று சொன்னதும் இருவரும் சந்தோசப்படுகின்றனர். அந்த குறி சொல்லும் பெண்மணியும் இவர்களிடம் இருந்து பணத்தை வாங்குகிறாள்.

இதையடுத்து, ரம்யா கோவிலுக்கு வர அங்கு தீபா இல்லாததால் இவ எங்க போனா? இவளை போட்டு தள்ள பிளான் போட்டது நடக்குமா? நடக்காதா? என்று புலம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர செகண்ட் ஒப்பீனியன் கேட்க போய் இருந்தியே என்ன ஆச்சு என்று கேட்க, எல்லா டாக்டரும் அதையேத்தான் சொல்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறான்.

மிரட்டும் ரியா: அடுத்து ரியா சுரேஷ் போனில் இருந்து போன் செய்து ஆனந்திடம் சமாதானம் பேச ஆனந்த் நீ சரண்டர் ஆகி தான் ஆகணும் என்று சொல்ல ரியா நான் சரண்டர் ஆகிடுறேன். ஆனால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். நான் அந்த வீட்டு மருமகளாக வாழனும் என்று சொல்ல ஆனந்த் முடியாது என்று மறுக்க கார்த்திக்கிடம் போனை கொடுக்க சொல்லி என்னுடைய டீலுக்கு ஓகே சொல்லலைனா உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X