போலீசுடன் வந்த மாயா.. ரேவதிக்காக கார்த்திக் செய்யும் விஷயம்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மாயா ரேவதியை மடக்கி பிடித்து மகேஷ் எங்கே என்று விசாரிக்க எனக்கு தெரியாது. ராஜாவுக்கு தான் தெரியும் என்று சொல்கிறாள். மாயா மகேஷ் எனக்கு வேணும் என்று மிரட்டுகிறான். இதையடுத்து ரேவதி பிரேம் போட்ட போட்டோவுடன் வீட்டிற்கு வர இதை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். ரேவதி மனதில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நம்புகின்றனர். ரேவதி பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு கார்த்திக்கிற்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க, நான் சமைத்து தர போறேன் என்று சொல்கிறாள். பரமேஸ்வரி பாட்டி கார்த்திக்கு பிடித்த உணவுகளை பற்றி சொல்ல, அனைத்தையும் சமைத்து எடுத்துக்கொண்டு தென்னத்தோப்பில் இருக்கும் கார்த்திக்கிற்கு கொண்டு செல்கிறாள்.
மறுபக்கம் சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் மகேஷை கண்டு பிடித்து தர சொல்லி கோர்ட்டில் கேஸ் போட சொல்லி ஏற்றி விட, மாயாவும், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதன் பின், சாமுண்டீஸ்வரி வீட்டில் அனைவரும் இருக்கும் போது மாயாவுடன் அங்கு வரும் போலீஸ், மகேஷ் காணாமல் போனது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சொல்ல கார்த்திக், சாமுண்டீஸ்வரி ஆகியோர் எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: அப்போது மாயா, பொய் சொல்றாங்க.. கைது பண்ணி விசாரிங்க என்று சொல்ல போலீஸ் அப்படியெல்லாம் அவசர அவசரமாக யாரையும் கைது செய்ய முடியாது என்கின்றனர். உடனே சாமுண்டீஸ்வரி என்ன மாயா, நீ போலீரோட வந்தா, நாங்க பயந்துவிடுவோமா, உண்மையில் அந்த மகேஷ் எங்க என்று யாருக்கும் தெரியாது என்று சொல்ல, மாயா ஏமாற்றத்துடன் கிளம்பி செல்கிறாள். பிறகு கார்த்திக் டாக்டரை சந்தித்து கூடிய சீக்கிரம் மகேஷ் சரியாக வேண்டும், இதுக்கும் ரேவதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று சொல்கிறான். இதனை தொடர்ந்து மைதிலி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க முத்துவேல் அவளை தவறாக தீண்டுகிறான். இந்த விஷயம் ரேவதிக்கு தெரிய வர அவள் கார்த்தியிடம் சொல்லி கவனிக்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன: மைதிலி கார்த்திக்கு தெரிந்தால் என்ன செய்வது என்ற பதற்றம் உருவானாலும் ஒரு கட்டத்தில் தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருகிறாள். தொடர்ந்து கார்த்திக்கு அபிராமிக்கு திதி கொடுக்க இரண்டு நாள் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்ல இதை சந்திரகலா கேட்டு விடுகிறாள். கார்த்தியை எப்படியாவது சாப்பிட வைத்து விட வேண்டும் என்று திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











