கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா காணாமல் போனதை அடுத்து கார்த்திக் அவளை தேடி செல்கிறான். அப்போது வழியில், மாணிக்கம் என்ற நண்பரை சந்திக்க, இருவரும் சேர்ந்து தீபாவை கடத்திய ரவுடியை சந்திக்க செல்கின்றனர். ஆனால் அந்த ரவுடி நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான்.
மறுபக்கம் வீட்டில், ஐஸ்வர்யா அருணாச்சலத்திடம் இருந்து சாவி கொத்தை வாங்குவதற்காக விதவிதமாக சமைத்து கொடுக்கிறாள். இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது அசைவத்தை சமைத்து இருக்க என்று திட்டுகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அதாவது, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க, தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு கார்த்திக், மாணிக்கம், இளையராஜா என மூவரும் சேர்ந்து தீபாவை தேட தொடங்குகின்றனர். இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள். மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.
ரம்யா போட்ட பிளான்: உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது. அதன் பிறகு ரம்யா, ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ரம்யாவிற்கு வர, ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட பாத்ரூமுக்குள் இருந்து ரம்யா பயந்து கத்திக்கொண்டே வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











