ரியா போட்ட கண்டிஷன்.. அடுத்தடுத்த திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவை காணாததால், கார்த்திக் நண்பர்களுடன் தீபாவை தேடி பல இடத்தில் அலைகிறான். மறுபக்கம், ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கால என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது. அதன் பிறகு ரம்யா, ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள்.

பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ரம்யாவிற்கு வர, ரியா கரப்பான் பூச்சியை தூக்கி பாத்ரூமுக்குள் போட ரம்யா பயந்து அங்கிருந்து கத்திக்கொண்டே வருகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரியா போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சாமியார் வேடம் போட்டு இருக்கிறாள். அவளை தேடி வரும் ஐஸ்வர்யா நீ சூப்பர் வேலை பண்ண, தீபாவை தூக்கின மாதிரி அடுத்து மீனாட்சியை தூக்கி காலி பண்ணு.. அப்படியே ஒவ்வொருத்தரா தீர்த்து கட்டிடு, என் புருஷனை மட்டும் விட்டுடு என்று சொல்ல ரியா நான் எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும், நீ இங்க சொகுசா வாழணுமா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறாள். இதையடுத்து, ரியா, நான் தீபாவை கடத்தல என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். அவள் அத்தைக்காக யாரோ ஒரு சாமியாரை தேடித் தான் போய் இருக்கா என்ற விஷயத்தை சொல்ல ரியா சந்தோசப்படுகிறாள்.

zee tamil Karthigai Deepam

கோவிலில் தீபா: மறுபக்கம், தீபா காட்டம்மன் கோவிலில் தீபா பரிகாரம் செய்வதற்காக காட்டப்படுகிறாள். சாமியார் அவளது கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும் அவளுக்குள் ஏதோ ஒரு எனெர்ஜி உருவாவதை உணர்கிறாள். இதையடுத்து சாமியார் பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் என்று சொல்ல தீபா, ரம்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்க? என்று விசாரிக்க நீ எங்க இருக்க என்று கேட்க தீபா கோவிலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரம்யா கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். தீபாவை கூட்டி கொண்டு பரிகாரம் செய்யும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.

zee tamil Karthigai Deepam

மிரட்டும் ரியா: மறுபக்கம் ரியா, மீனாட்சிக்கு போன் போட்டு தீபாவை நான் தான் கடத்தி வைத்து இருக்கிறேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஏய் ஒழுங்கா தீபாவை அனுப்பிவிடு, அத்தையை நீ சுட்டதையே எங்களால தாங்கிக் கொள்ள முடியல இதுல இது வேறையா என்று கோவத்தோடு கத்துகிறாள் மீனாட்சி. ஏய் மீனாட்சி என்ன சத்தம் ஓவரா வருது. என்கிட்ட ஒழுங்கா நடந்துக்கோ, இல்லனா அவ்வளவு தான். ஒழுங்கா நான் சொல்றதை ஒகே சொல்லு, நான் அந்த வீட்டுக்கு மருமகளா வரவேண்டும், ஆனந்தோடு சேர்ந்து வாழ வேண்டும். இதற்கு நீ ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தீபாவை நீங்க பிணமாத்தான் பாப்பீங்க என்ன புரிஞ்சுதா என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா அடிப்பாவி காலையில நாம கேட்கும் போது, தீபாவை நான் கடத்தவில்லை என்று சொன்னா, இப்போ நான் தான் கடத்துனேனு சொல்லுறா, உண்மையில் தீபாவை யார் கடத்தி இருப்பா என்று ஐஸ்வர்யா மனதிற்குள் யோசித்துக்கொண்டு இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X