தீபாவை தேடி அலையும் கார்த்திக்.. ரம்யா போடும் திட்டம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா காட்டம்மன் கோவிலில் பரிகாரம் செய்வதாக காட்டப்படுகிறது. சாமியார் அவளது கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும் அவளுக்குள் ஏதோ ஒரு எனெர்ஜி உருவாவதை உணர்கிறாள். இதையடுத்து சாமியார் பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் என்று சொல்ல தீபா, ரம்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்க? என்று விசாரிக்க நீ எங்க இருக்க என்று கேட்க தீபா கோவிலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரம்யா கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். தீபாவை கூட்டி கொண்டு பரிகாரம் செய்யும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.
மறுபக்கம், ரியா மீனாட்சிக்கு போன் போட்டு தீபாவை நான் தான் கடத்தி வைத்து இருக்கிறேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நான் அந்த வீட்டுக்கு மருமகளா வரவேண்டும், ஆனந்தோடு சேர்ந்து வாழ வேண்டும். இதுக்கு நீங்க ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தீபாவை நீங்க பிணமாத்தான் பாப்பீங்க என்று மிரட்டுகிறார். இதையடுத்து நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் மைதிலிக்கு போன் செய்து தீபாவை காலையில் இருந்த காணவில்லை என்று சொல்கிறான். அவள் செங்கல்பட்டு பக்கத்தில் இருக்கும் சாமியாரை பார்க்க போய் இருக்கா, ஆனால் பரிகாரம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல கார்த்திக், இளையராஜாவிடம் செங்கல்பட்டு சாமியார் குறித்து கேட்க எனக்கு அங்க இருக்க முனீஸ்வரன் கோவில் பூசாரி ஒருத்தரை தெரியும். அவரை போய் பார்த்தா நமக்கு தகவல் கிடைக்கும் என்று சொல்கிறான்.
தீபாவை தேடும் கார்த்திக்: இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்கிறான். அப்போது காரில் தீபாவுடன் இருக்கும் ரம்யா, எனக்கு வாந்தி வருவதாக சொல்லி வண்டியை நிறுத்த சொல்லி வெளியே வந்து, கார்த்திக்கிடம் போன் பேசுகிறாள். அப்போது கார்த்திக், தீபா எதாவது கோவிலை பத்தி சொன்னாங்களா என்று கேட்க, அது பற்றி என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை, எனக்கு எதுவும் தெரியல என்று ரம்யா சொல்ல செங்கல்பட்டு சாமியார் குறித்து விசாரிக்க ரம்யா ஷாக் ஆகிறாள்.
தீபா கதையை முடிக்கணும்: கார்த்திக், யாரோ தெரியாத சாமியாரை நம்பி தீபா பரிகாரம் செய்யக்கூடாது, அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது, நானும் செங்கல்பட்டு வருகிறேன் என்று சொல்ல, சரி வாங்க என்று கார்த்திக் போனை வைக்கிறான். கார்த்திக் தீபாவை தேட ஆரம்பிச்சிட்டான் அவன் இடத்தை கண்டுபிடிப்பதற்குள் தீபாவை ஆத்தோட அனுப்பிடனும் என்று வேக வேகமாக காருக்குள் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











