திதி கொடுக்க வந்த கார்த்திக்.. சிக்க வைக்க திட்டமிட்ட சந்திரகலா.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் திதி கொடுக்க விதரமிருக்க இதை கெடுக்க சந்திரகலா, முத்துவேலிடம் கார்த்திக் நிச்சயம் அபிராமிக்கு திதி கொடுக்க கோவிலுக்கு வருவான். அவன் வந்ததும் என்னிடம் சொல்லு நான், கோவிலுக்கு அக்காவை அழைத்து வருகிறேன். அக்கா அவனை நேரில் பார்த்த மொத்த கதையும் முடிந்துவிடும் என்று சொல்கிறாள்.

மறுபக்கம், சந்திரகலா, கார்த்திக்கை பழிவாங்க முடியாத கோவத்தில் அவனின் நண்பன் நவீனை பொய்யான கேஸ் கொடுத்து போலீஸ்க்கு பணத்தை கொடுத்து நவீனை கைது செய்ய வைக்கிறாள், இந்த விஷயம் கார்த்திக் போலீஸ் ஸ்டேஷன் வந்து, அவர் யார் தெரியுமா என்னுடைய சகல, அவனை எதுக்கு இப்போது கைது செய்து வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்க, அப்போது போலீஸ் உனக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது, நீ ஒன்னும் பெரிய ஆள் இல்ல என்கிறார். அப்போது, கார்த்திக் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்களே நவீனை வெளியில் அனுப்புவீங்க பாக்குறீங்களா... இப்போ உங்களுக்கு போன் வரும் என்று சொல்ல, அந்த நேரத்தில் போன் வருகிறது, கார்த்திக்கின் வழக்கறிஞரும் வந்த, எந்த காரணத்திற்காக நவீனை செய்து செய்தீர்கள் என்று கேட்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம் சீரியல்: இதனால், பதறிப்போன போலீஸ், நவீனை அனுப்பி விடுகின்றனர். நவீன் வெளியில் வந்துவிட்டதை தெரிந்து கொண்ட சந்திரகலா, ஸ்டேஷனுக்கு வந்து, நவீன் பெயிலில் வெளியே வரக்கூடாது என்று சொல்லி தானே காசு கொடுத்தேன். ஆனால், அவனை எதுக்கு விட்டீங்க என்று கேட்க, கார்த்திக் லாயருடன் வந்து முறையா வெளியே எடுத்து விட்டு விட்டதாக சொல்கிறான். அதன் பிறகு கார்த்திக் வீட்டிற்கு வருகிறான். அந்த நேரம் பாட்டி பரமேஸ்வரி, கோவிலில் எல்லாம் தயாராக இருக்கு நீ வந்தால் போதும் என்று சொல்கிறாள். உடனே கார்த்திக் அம்மாவிற்கு திதி கொடுக்க வெளியே சென்று வருவதாக சொல்லி கிளம்புகிறான். ஆனால் ரேவதி, கார்த்திக் நிதி கொடுப்பதற்கு தான் செல்கிறார் என்பதை புரிந்து கொள்கிறாள். மறுபக்கம், கோவில், பரமேஸ்வரி பாட்டி, திதி கொடுப்பதற்கு தயாராக இருப்பதை பார்த்த முத்துவேல், சந்திரகலாவிற்கு விஷயத்தை சொல்கிறான். அந்த நேரம் அங்கு வரும் கார்த்திக், சாமுண்டீஸ்வரியிடம் அத்தை நான் செங்கல்சூளை வரை போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

ரேவதி போட்ட பிளான்: கார்த்திக் திதி கொடுப்பதற்கு தான் செல்கிறான் என்பதை தெரிந்து கொண்ட சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை வேறொரு காரணம் சொல்லி கோவிலுக்கு அழைத்து சென்று கார்த்திக் திதி கொடுப்பதை பார்க்க வைத்து அவனை சிக்க வைக்க திட்டம் போடுகிறாள். அதை தெரிந்து கொண்ட ரேவதி, கார்த்திகை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். சந்திரகலா ஒரு நிலம் விலைக்கு வந்திருப்பதாக சொல்லி சாமுண்டீஸ்வரியை அழைத்து சென்று அப்படியே திதி கொடுக்கும் கோவிலுக்கும் செல்கிறாள். இவர்களுக்கு முன்பாக வரும் ரேவதி கார்த்தியை காப்பாற்ற சாமி வந்தது போல் ஆடி குறி சொல்கிறாள். சந்திரகலா ஏதோ தப்பு பண்ணி இருக்கா.. வெறும் காலில் பால் குடம் எடுத்துக்கிட்டு இங்கிருந்து வீடு வரைக்கும் நடந்தே போகணும் என்று பரிகாரம் சொல்கிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை பரிகாரம் செய்ய சொல்ல கார்த்தியை சிக்க வைக்க முடியாமல் வீடு திரும்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X